- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
கலிங்கத்துப்பரணி (sem-2)
1. எடுமெடு மெடுமென எடுத்ததோர்
இகலொலி கடலொலி இகக்கவே
விடுவிடு விடுபரி கரிக்குழாம்
விடும்விடு மெனுமொலி மிகைக்கவே
பொருள் :
சோழர் படையினரும் ,கலிங்கர் படையினரும் குதிரைப் படை யானைப் படைகளை ஏவிப் போர் புரிய
தொடங்கினர் . போர் தொடங்குங்கள் !என்று உரத்து கூவினர் . இந்த போரின்
ஓசையானது கடல் ஒலியை வென்றது .பகைவர் மேல் குதிரை படையை ஏவுங்கள்
!யானை படையை விடுங்கள் !விடுங்கள் !விடுங்கள் !என்று வீரர்கள் உரைக்கும் ஓசையானது
மிகுதியாய் உண்டாயிற்று
2. வெருவர வரிசிலை தெரித்தநாண்
விசைபடு திசைமுகம் வெடிக்கவே
செருவிடை அவரவர் தெரித்ததோர்
தெழிஉல குகள்செவி டெடுக்கவே
பொருள் :
வீரர்கள் ஆரவாரித்தலாகிய போரில், அவர்களுக்குளுள்ள ஆவலாலும் ஆண்மையாலும் ,யாவரும்
அஞ்சும் படி ,கட்டமைத்த வில்லிலிருந்து வேகத்தோடு
துள்ளி எழுந்த நாண் ஓசையால் பொருந்திய திக்குகளாகிய இடங்கள் பிளந்தன .
போர்க்களத்தில் அவரவர்கள் ஆரவாரித்தலாகிய ஒப்பற்ற முழக்கத்தால் உலகங்கள்
செவிடுப்பட்டன !
3. எறிகட
லொடுகடல் கிடைத்தபோல்
இருபடை களுமெதிர் கிடைக்கவே
மறிதிரை யொடுதிரை மலைத்தபோல்
வருபரி யொடுபரி மலைக்கவே .
பொருள் :
சோழர் படைகளும் கலிங்கர் படைகளும்
ஒன்றை ஒன்று தேரில் எதிர்த்தது ,அலை மோதும் கடலுடன் மற்றொரு கடல் எதிர்த்தது போல் இருந்தது ! போரில் சீறிவரும்
குதிரைகளுடன் குதிரைகள் போர் புரிவது கடலில் சுருண்டு விழும் அலைகள் அலைகளுடன் போர்புரிதலை போன்று இருந்தது !
4. கனவரை யொடுவரை முனைத்தபோல்
கடகரி யோடுகரி முனைக்கவே
இனமுகில் முகிலோடு மெதிர்த்தபோல்
இரதமோ டிரதமும் எதிர்க்கவே
பொருள் :
மதம் பொழியும் யானைகளோடு யானைகள் போர் புரிவது பெரிய மலைகளோடு மலைகள் போர்
புரிவது போல் இருந்தது . தேர்களோடு தேர்கள் எதிர்த்துப் போர் புரிவது மேகக்
கூட்டங்கள் போர் புரிவது போல் இருந்தது .
5. பொருபுலி புலியொடு சிலைத்தபோல்
பொருபட ரொடுபடர் சிலைக்கவே
அரிபினெ டரியினம் அடர்ப்பபோல்
அரசரும் அரசரும் அடர்க்கவே
பொருள் :
தாக்கும் புலிகளோடு புலிகள் ஆரவாரித்துப்
போர் புரிவது போல் ,போர் புரியும் அரசர்களோடு அரசர்கள்
ஆரவாரித்து போர் புரிந்தனர் .! சிங்கங்களோடு சிங்கங்கள் போர் புரிவது போல்
அரசர்களோடு அரசர்கள் போர் புரிந்தனர்!
6. விளை கனல் விழிகளின் முளைக்கவே
மினலொளி கனலிடை எறிக்கவே
வளைசிலை யுருமென இடிக்கவே
வடிகணை நெடுமழை படைக்கவே
பொருள் :
இரண்டு பக்கங்களிலும் உள்ள
வீரர்களின் கண்களில் கோபத்தீ எழுந்தது ! அந்த கோபக் கனலில் மின்னல் போன்ற ஒளி
வீசியது ! வீரர்கள் கையிலுள்ள வளைந்த வில்களின் ஒலி இடியோசை போல் ஒலித்தது ! அந்த
வில்லிலிருந்து கூர்மையான அம்புகள் என்னும் மிக்க மழையும் உண்டாயிற்று .
7. குருதியின் நதிவெளி பரக்கவே
குடையினம் நுரையென மிதக்கவே
கரிதுணி படுமுடல் அடுக்கியே
கரைஎன இருபுடை கிடக்கவே
பொருள்:
கலிங்கப் போர்க்களத்தில் இரத்தம் வெளியிடங்களில் எல்லாம் ஆறு போலப் பரவிச்
சென்றது ! வெண்மையாகிய குடைகளின் கூட்டங்கள் வெண்மையாகிய துரைபோல மிதந்து தோன்றின
! வீரர்கள் யானைகளை இரண்டு துண்டங்களாக வெட்டிப் போட்டனர் . அவ்வாறு வெட்டப்பட்ட
யானைகளின் உடல்கள் ,அந்த இரத்த ஆற்றின் கரைபொன்று
ஒன்றன்மேல் ஒன்றாக கிடந்தன !
8. மருப்பொடு மறுப்பெதிர் பொருப்பிவை
எனப்பொரு மதக்கரி மருப்பி னிடையே
நெருப்பொடு நெருப்பெதிர் சுடர்ப்பொறி
தெறித்தெழ நிழற்கொடி தழற்க துவவே
பொருள் :
இருதிறப் படைகளிலும் உள்ள மதம் பொருந்திய யானைகள் ஒன்றோடு ஒன்று
எதிர்த்துப் போர் புரிந்தன ! அவை மலைகளோ என்று சொல்லும்படியாக பகுத்து இருந்தன !
அவ் யானைகள் கொம்புகளோடு கொம்புகளால் தாக்கி போர்ப் புரியும்போது , அவற்றின் தந்தங்களிலிருந்து தீப் பொறிகள் பறந்தன ! அந் நெருப்புப்
பொறிகள் மேலே எழுதலால் ,நிழலைத் தரும் கொடிச் சிலைகள்
தீப்பிடித்துக் கொண்டன !