- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
தனிப்பாடல்கள்-காளமேகப்புலவர் (sem-2)
வைக்கோலும் யானையும்
வாரிக் களத்தடிக்கும், வந்தபின்பு கோட்டைபுகும்
போரில் சிறந்து பொலிவாகும் - சீருற்ற
செக்கோல மேனித் திருமலைரா யன்வரையில்
வைக்கோலு மால்யானை யாம்.
பொருள் :
சிறப்புப் பொருந்திய செம்மை நிறமுடைய அழகான மேனியுடைய திருமலை ராயனின் மலைச்சாரலிடத்தில் வைக்கோல் மதயனைக்குச் சமம் என்று கூறுகிறார் கவி காளமேகம்.வைக்கோல், உழவர்களால் கற்றை கற்றையாக வாரிஎடுத்துச் செல்லப்பட்டு களத்துமேட்டில் அடிக்கப்படும். பிறகு பண்டகசாலைகளில் கோட்டையாகக் கட்டிச் சேர்க்கப்படும். ஊருக்குள் கொண்டுவரப்பட்டு. பெரிய பெரிய வைக்கோற் போர்களாக வைக்கப்பட்டு சிறப்பாகத் தோன்றும்.
அதே போல் -யானையானது , போர்க்களத்தில் பகைவர்களைத் துதிக்கையால் தூக்கிஎடுத்துத் தரையில் வீடி அடித்துக் கொல்லும். பகைவர்களைக் கொன்ற பின் அவர்கள் கோட்டைக்குள் வெற்றியுடன் நுழையும். .இப்படி போர்க்காலத்தில் யானையானது சிறப்பாகத் தோன்றும்
இதனால் வைக்கோலும் யானையும் சமம் என கவிகாளமேகம் அழகாகக் கூறுகிறார்.கதவு-ஆடு
செய்யுட் கிடைமறிக்கும் ; சேர்பலகை யிட்டுமுட்டும் ;
ஐயமுற மேற்றா ளடர்க்குமே - துய்யநிலை
தேடும் புகழ்சேர் திருமலைரா யன்வரையில்
ஆடும் கதவுநிக ராம்.
பொருள் :
ஆடு
(செய்யுள்) ஆடு வயலில் மந்தை மந்தையாகக் கிடக்கும். (பல + கை) கைகள் பல சேர்ந்து தன்னைத் தடுக்கும் பொழுது தன் தலையால் முட்டும். (மேற்று + ஆள்) தன்னைத் தாக்க வருபவரைத் தானும் உறுதியாகத் தாக்கும். (துய்யநிலை தேடும்) தான் படுப்பதற்கேற்ற தூய்மையான இடத்தைத் தேடிப் படுக்கும்.கதவு
வீட்டின் உள்ளிடத்தில் (இரண்டு அறைகளைத்) தடுத்து மூடும். (செய் + உள்+ இடை+ மறிக்கும்) மரப்பலகைகளைச் சேர்த்துச் செய்யப் பெற்று வாயிலை மூடப் பயன்படும். (சேர் + பலகை) தூய்மையான (வாயில் நிலை) நிலைபொருந்தியதாக இருக்கும். நன்றாகப் பொருந்தி மூடுவதற்கு அதன், மேல் தாழ்ப்பாள் செறிவாகத் தடுக்கும். (மேல் + தாள் = தாழ்ப்பாள்)பூசணிக்காய்-பரமசிவம்
அடிநந்தி சேர்தலா லாகம் வெளுத்துத்
கொடியுமொரு பக்கத்திற் கொண்டு -வடிவுடைய
மாசுணத்தை பூண்டு வளைத் தழும்பு பெற்றதனால்
பூசணிக்காயும் ஈசனெனப் போற்று!!
பொருள் :
பூசணிக்காயானது :
அடி நந்தி சேர்தலால் - அடிப்பாகத்தே பெரிய காம்பு சேர்ந்திருக்க விளங்குவதால்ஆகம் வெளுத்துத் - உடல் வெளுத்து
கொடியும் ஒரு பக்கத்திற் கொண்டு - ஒரு பக்கத்தே கொடியினைக் கொண்டு
வடிவுடைய மாசுணத்தை பூண்டு - அழகான வெண்நிறத்தை மேல் கொண்டு
வளைத் தழும்பு பெற்றதனால் - வளைவான் தழும்புகளை மேல் கொண்டதனால்
பூசணிக்காயும் ஈசனெனப் போற்று!! - பூசணிக்காயையும் ஈசனாகக் கருதிப் போற்றுவாயாக !!
சிவபெருமான் :
அடிநந்தி சேர்தலால் - திருவடியிலே நந்திப்பெருமான் சேர்ந்திருத்தலாலும்ஆகம் வெளுத்துத் - திருநீறணிந்து உடல் வெண்மையையாய் இருப்பதாலும்
வடிவுடைய கொடியுமொரு பக்கத்திற் கொண்டு - ஒரு பக்கத்தில் பூங்கொடியாய உமையைக் கொண்டு
மாசுணத்தை பூண்டு - சிறந்த பாம்பு ஆபரணத்தைக் கொண்டு
வளைத் தழும்பு பெற்றதனால் -தன் திருமேனியினிடத்தே அம்மை தழுவியதால் ஏற்பட்ட வளையல் தழும்புகளைக் கொண்டவர் சிவபெருமான்.