இரட்டைப் புலவர் பாடல்கள்

இரட்டைப் புலவர் பாடல்கள்  (sem-2)



அப்பிலே தோய்த்திட்டு அடுத்தடுத்து நாம் அதனைத்
தப்பினால் நம்மையது தப்பாதோ-இப்புவியில்   
இக்கலிங்கம் போனால் என்? ஏகலிங்க மாமதுரைச்
சொக்கலிங்கம் உண்டே துணை.


பொருள் :


ஆடைகளை (அப்பிலே) தண்ணீரில் தோய்த்து அடுத்தடுத்து நாம் அதனைத் தப்பித் தப்பி அடித்துத் துவைத்தால் (அது துன்பப்பட்டு) நம்மை அந்தத் துணி நம்மைவிட்டு தப்பித்து ஓட முயற்சிக்காதா என்று முடவர் குருடரைப் பார்த்துக் கேட்க ,
அதற்கு குருடர் ஒப்பில்லாத இந்த்த் துணி(கலிங்கம்) போனால் என்ன மாமதுரையில் உள்ள சொக்கலிங்கமான இறைவன் உண்டே துணை என்று பதில் அழித்தார். இந்தப் வெண்பாப் பாடலில் முதலிரண்டு வரிகளை முடவர் பாடியது.பின்னிரண்டு வரிகளை குருடர் பாடியது.ஆனால் பொருள், சந்தம்,இசை இவற்றில் ஒத்திருக்கும் என்பதே இதன் அழகு.