- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
திருக்குற்றால குறவஞ்சி (sem-2)
செங்கையில் வண்டு கலின்கலின் என்று செயஞ்செயம் என்றாட இடை
சங்கதம் என்று சிலம்பு புலம்பொடு தண்டை
கலந்தாட இரு
கொங்கை கொடும்பகை வென்றனம் என்று குழைந்து
குழைந்தாட மலர்ப்
பைங்கொடி நங்கை வசந்த சவுந்தரி
பந்து பயின்றாளே!
பொருள் :
மலர்களைக் கொண்ட பசுமையான கொடி போன்ற அழகை உடைய வசந்தவல்லி பந்து ஆடுகிறாள்!
ஆட்டம் தொடங்கியபின் வெற்றி வெற்றி என்று சத்தமிடுவார்கள். ஆனால் இங்கே, ஆட்டம் தொடங்குமுன்பே வெற்றி முழக்கம். எப்படி?
வசந்தவல்லியின் சிவந்த கைகள், அதில் அழகான வளையல்கள், அவை கலின் கலின் என்று சத்தமிடுகின்றன. அது ‘வெற்றி, வெற்றி’ என்று சத்தமிடுவதுபோல் இருக்கிறது. அதோடு தண்டை, சிலம்பு ஓசையும் சேர்ந்துகொள்கிறது.
அவளுடைய மார்பகங்கள் குழைந்து ஆடுகின்றன. அவற்றுக்கு ஒரே மகிழ்ச்சி. ’எதிரியை ஜெயித்துவிட்டோம்’ என்று ஆனந்தக் கூத்தாடுகின்றன.
பொங்கு கனங்குழை மண்டிய கெண்டைபுரண்டு
புரண்டாடக் குழல்
மங்குலில் வண்டு கலைந்தது கண்டு மதன்சிலை
வண்டோட இனி
இங்கிது கண்டுல கென்படும் என்படும் என்றிடை
திண்டாட மலர்ப்
பங்கய மங்கை வசந்த சவுந்தரி
பந்து பயின்றாளே!
பொருள் :
நன்கு ஆடுகிற தோகை மயிலைப்போல, நகர வீதியில் அழகிய ஒய்யாரியான வசந்தவல்லி பந்து ஆடுகிறாள்!
வசந்தவல்லி தன்னுடைய கைகளில் சூடகம் என்கிற வளையல்களையும் சங்கு வளையல்களையும் அணிந்திருக்கிறாள். அவள் ஆடும்போது இந்த் அவளையல்கள் ஆட, அதனால் அவளுடைய தோளில் அணிந்துள்ள வளையல்கூட மேலே எழுந்து ஆடுகிறது. அவளுடைய கால்களில் கொலுசுகளும் தண்டைகளும் மேலே கீழே குதிக்கின்றன!
சூடக முன் கையில் வால்வளை கண்டிரு தோள்வளை
நின்றாடப் புனை
பாடக முஞ்சிறு பாதமும் அங்கொரு பாவனை
கொண்டாட நய
நாடகம் ஆடிய தோகை மயிலென நன்னகர்
வீதியிலே அணி
ஆடக வல்லி வசந்த ஒய்யாரி
அடர்ந்துபந் தாடினாளே !
பொருள் :
நன்கு ஆடுகிற தோகை மயிலைப்போல, நகர வீதியில் அழகிய ஒய்யாரியான வசந்தவல்லி பந்து ஆடுகிறாள்!
வசந்தவல்லி தன்னுடைய கைகளில் சூடகம் என்கிற வளையல்களையும் சங்கு வளையல்களையும் அணிந்திருக்கிறாள். அவள் ஆடும்போது இந்த் அவளையல்கள் ஆட, அதனால் அவளுடைய தோளில் அணிந்துள்ள வளையல்கூட மேலே எழுந்து ஆடுகிறது. அவளுடைய கால்களில் கொலுசுகளும் தண்டைகளும் மேலே கீழே குதிக்கின்றன!
இந்திரை யோஇவள் சுந்தரி யோதெய்வரம்பையோ
மோகினியோ மனம்
முந்திய தோவிழி முந்திய தோகரம் முந்திய
தோவெனவே உயர்
சந்திர சூடர் குறும்பல ஈசுரர் சங்கணி
வீதியிலே மணிப்
பைந்தொடு நாரி வசந்தஒய் யாரிபொற்
பந்துகொண் டாடினாளே!
பொருள்:
சந்திரனைத் தலையில் சூடிய குற்றாலநாதர் எழுந்தருளியிருக்கிற இந்த நகரத்தின் வீதிகளில் சங்குப் பூச்சிகள் வரிசையாகச் செல்கின்றன. அங்கே வசந்தவல்லி பொற்பந்து விளையாடுகிறாள்!
அவள் ஆடுவதைப் பார்க்கிறவர்களுக்கெல்லாம் ஒரு சந்தேகம், இவள் யார்? வசந்தவல்லிதானா? அல்லது திருமகளோ? சுந்தரியோ? தேவ மகளிர் என்று சொல்லப்படும் ரம்பையோ? மோகினியோ?
இவள் எப்படிப் பந்தாடுகிறாள்? பந்தைப் பார்த்ததும் அதை அடிக்க இவளுடைய மனம் முதலில் செல்கிறதா? அல்லது, கண்கள் முதலில் செல்கின்றனவா? அல்லது கைகள் முதலில் செல்கின்றனவா? ஒன்றுமே புரியவில்லை. ஆனால் அருமையாக ஆடுகிறாள் என்பதுமட்டும் தெரிகிறது!
Comments
Post a Comment