- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
திருவருட்பா-பிள்ளைச் சிறு விண்ணப்பம்( sem-1)
தடித்தஓர் மகனைத் தந்தைஈண் டடித்தால்தாயுடன் அணைப்பள்தாய் அடித்தால்
பிடித்தொரு தந்தை அணைப்பன்இங் கெனக்குப்
பேசிய தந்தையும் தாயும்
பொடித்திரு மேனி அம்பலத் தாடும்
புனிதநீ ஆதலால் என்னை
அடித்தது போதும் அணைத்திடல் வேண்டும்
அம்மைஅப் பாஇனி ஆற்றேன்.
உரை:
மற்றவர் அறியார் என்றனை ஈன்ற
வள்ளலே மன்றிலே நடிக்கும்
கொற்றவ ஓர்எண் குணத்தவ நீதான்
குறிக்கொண்ட கொடியனேன் குணங்கள்
முற்றும்நன் கறிவாய் அறிந்தும்என் றனைநீ
விரும்பினும் அங்ஙனம் புரியச்
சம்மதிக் கின்றார் அவன்றனைப் பெற்ற
தந்தைதாய் மகன்விருப் பாலே
இம்மதிச் சிறியேன் விழைந்ததொன் றிலைநீ
என்றனை விழைவிக்க விழைந்தேன்
செம்மதிக் கருணைத் திருநெறி இதுநின்
புல்முனை ஆயினும் பிறர்க்கு
நைபிழை உளதேல் நவின்றிடேன் பிறர்பால்
நண்ணிய கருணையால் பலவே.
கைபிழை யாமை கருதுகின் றேன்நின்
கழற்பதம் விழைகின்றேன் அல்லால்
செய்பிழை வேறொன் றறிகிலேன் அந்தோ
அம்மையும் அப்பனுமாகிய பெருமானே, வளர்ச்சியால் உடல் தடித்த மகன் செய்த தவறு கண்டு தந்தை யவனை யடிப்பானாயின், உடனே தாய் அவ்விடம் போந்து தடுத்துத் தன் மகனை அணைத்துக் கொள்வாள்; தாய் அடிப்பாளாயின், தன் கையிற் பற்றிப் பிடித்துக் கொண்டு தந்தை தன்னோடு அணைத்துக் கொள்வான்; திருநீறணிந்த திருமேனியை யுடையனாய்த் தில்லையம்பலத்தில் திருக்கூத்தாடும் தூயவனே, இவ்வுலகில் எனக்கு நூல்கள் உரைத்த தந்தையும் தாயும் நீயாதலால் இதுவரை உலகியல் துன்பங்களால் என்னை வருத்தியது போதும்; இனி உனதருளால் என்னை ஆதரிக்க வேண்டும்; இனிமேல் இத்துன்பத்தைப் பொறுக்க மாட்டேன்.
பெற்றதம் பிள்ளைக் குணங்களை எல்லாம்
பெற்றவர் அறிவரே அல்லால்
வள்ளலே மன்றிலே நடிக்கும்
கொற்றவ ஓர்எண் குணத்தவ நீதான்
குறிக்கொண்ட கொடியனேன் குணங்கள்
முற்றும்நன் கறிவாய் அறிந்தும்என் றனைநீ
முனிவதென் முனிவுதீர்ந் தருளே.
வெம்மதிக் கொடிய மகன்கொடுஞ் செய்கை
உரை:
அம்பலத்திலே திருக்கூத் தியற்றும் அருளரசே, என் குணங்களை யுடைய இறைவனே, என்னைப் பெற்ற அருள் வள்ளலே, தாம் பெற்ற பிள்ளைகளின் குணங்களை யெல்லாம் பெற்றவராகிய தாய் தந்தையர் அறிவார்களே யன்றி மற்றவர்கள் அறிய மாட்டார்கள்; நான் மேற் கொண்டுள்ள குணங்களாற் கொடியவனாயினேன்; என்னுடைய குணங்கள் அனைத்தையும் நீ முற்றவும் நன்கறிவாய்; அறிந்திருந்தும் வெறுப்பது ஏன்? வெறுப்பகன்று ஆண்டருள்க.
விரும்பினும் அங்ஙனம் புரியச்
சம்மதிக் கின்றார் அவன்றனைப் பெற்ற
தந்தைதாய் மகன்விருப் பாலே
இம்மதிச் சிறியேன் விழைந்ததொன் றிலைநீ
என்றனை விழைவிக்க விழைந்தேன்
செம்மதிக் கருணைத் திருநெறி இதுநின்
திருவுளம் அறியுமே எந்தாய்.
பொய்பிழை அனந்தம் புகல்கின்றேன் அதில்ஓர்
உரை:
வெவ்விய அறிவும் கொடுமைப் பண்புமுடைய மகன் கொடிய செயலொன்றைச் செய்யவிரும்புவானாயின், மகன்பால் உள்ள ஆசையால் அவனைப் பெற்ற தாயும் தந்தையும் அவன் புரியும் கொடுஞ் செயலுக்கு உடன்படுகின்றனர்; இந்த மதியுடைய சிறியவனாகிய யான் குற்ற மொன்றும், செய்ததில்லை; என் மனத்தில் உன்பால் அன்புண்டாகச் செய்தமையால் நான் உன்பால் அன்பு கொண்டேன்; செவ்விய அறிஞர் மதிக்கும் அருளமைந்த திருநெறியும் இதுவாகும்; இவை யனைத்தும் சிவ பெருமானாகிய எந்தையே, உனது திருவுள்ளம் அறிந்த செய்தி யன்றோ.
புல்முனை ஆயினும் பிறர்க்கு
நைபிழை உளதேல் நவின்றிடேன் பிறர்பால்
நண்ணிய கருணையால் பலவே.
கைபிழை யாமை கருதுகின் றேன்நின்
கழற்பதம் விழைகின்றேன் அல்லால்
செய்பிழை வேறொன் றறிகிலேன் அந்தோ
திருவுளம் அறியுமே எந்தாய்.
இருக்கவும் ஆசைஇன் றினிநான்
பிறக்கவும் ஆசை இலைஉல கெல்லாம்
பெரியவர் பெரியவர் எனவே
சிறக்கவும் ஆசை இலைவிசித் திரங்கள்
செய்யவும் ஆசைஒன் றில்லை
துறக்கவும் ஆசை இலைதுயர் அடைந்து
உரை:
எந்தையாகிய சிவபெருமானே, பொய் கூறுதல் முதலிய குற்றங்கள் எண்ணிறந்தன செய்வேனாயினும், அவற்றுள் புல்லின் நுனியளவும் பிறர்க்கு வருத்தம் உண்டு பண்ணும் பிழை சிறிது உளதாயினும் வாயாற் சொல்ல மாட்டேன்; பிறர்பால் உண்டாகிய அருளுணர்வால் சிறு பிழைகள் பலவும் செய்ய நினைப்பதில்லேன்; நின்னுடைய திருவடிப் பேற்றின் கண் ஆர்வம் உடையனாவதன்றிச் செய்தற்குரிய பிழை வேறே ஒன்றும் அறியேன்; ஐயோ, எனது இந்நிலைமை தேவரீர் அறிந்ததன்றோ.
இருக்கவும் ஆசைஇன் றினிநான்
பிறக்கவும் ஆசை இலைஉல கெல்லாம்
பெரியவர் பெரியவர் எனவே
சிறக்கவும் ஆசை இலைவிசித் திரங்கள்
செய்யவும் ஆசைஒன் றில்லை
துறக்கவும் ஆசை இலைதுயர் அடைந்து
தூங்கவும் ஆசைஒன் றிலையே.
உரை:
எந்தையாகிய சிவபிரானே, இவ்வுலகில் இறந்துபடுதற்கும் எனக்கு விருப்ப முண்டாகவில்லை; இப்படியே பயனற்றிருந் தொழிவதற்கும் விருப்பமில்லை; இறந்த பின் வேறு பிறப்பெடுக்கவும் ஆசை யுண்டாகிற தில்லை; இனி, இவ்வுலகில் இவர் பெரியவர் பெரியவர் எனக் கண்டோர் சிறப்பிக்கின்ற நிலையைப் பெற ஆசை கொள்ளவில்லை; மந்திர தந்திர சாலங்கள் செய்யவும் ஆசையில்லை; உலகியற் பற்றற்ற துறவி யாதற்கும் எனக்கு விருப்பமில்லை; இன்பம் சிறிதுமின்றி, துன்ப நிலையிலேயே இருக்கவும் விருப்புண்டாக வில்லை, காண்.
Comments
Post a Comment