ஔவையார்-நல்வழி

 ஔவையார்-நல்வழி


சாதி யிரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்

நீதிவழுவா நெறிமுறையின் – மேதினியில்

இட்டார் பெரியோ  ரிடாதா ரிழிகுலத்தோர்

பட்டாங்கி லுள்ள படி.

விளக்கம்: 

உண்மை நெறிப்படி கூறுவதாயின், உலகத்தில் பிறந்த மனிதர்களில் இரண்டு வகை ஜாதியினர் தான் உள்ளனர். ஒருவர் அடுத்தவருக்கு கொடுத்து உதவும் நல்ல குணம் படைத்த மேலோர், மற்றொருவர் தன்னிடம் உள்ளவற்றை அடுத்தவருக்கு கொடுத்து உதவாத கீழோர்..மேலோர் கண்ட நீதி நெறி நூலில் சொல்லப்பட்ட விஷயம் இது தான், இதை நன்றாக உணர்ந்து கொள்.


இடும்பைக் கிடும்பை யியலுடம்பி தன்றே

இடும்பொய்யை மெய்யென் றிராதே – இடுங்கடுக

உண்டாயி னுண்டாகு மூழிற் பெருவலிநோய்

விண்டாரைக் கொண்டாடும் வீடு.

விளக்கம்: 

நிலையில்லாத இந்த உடம்பை, மெய் என்று கருதி அதற்கு அனைத்தும் செய்கிறாயே, மெய் என்று கூறும் உடல் பொய் என்பதை உணர்ந்து, வறியவருக்கு விரைந்து காலம் தாழ்த்தாமல் ஈகை செய்க, மக்கள் ஊழின் வினைப்படி நல்ல காரியம் செய்து செல்ல வேண்டும் என்று நினைக்கும் சொர்க்கம் உங்களுக்கு வாசல் கதவை திறக்கும்.


ஒருநா ளுணவையொழி யென்றா லொழியாய்

இருநாளுக் கேலென்றா லேலாப் – ஒருநாளும்

என்னோ  வறியா யிடும்பைகூ ரென்வயிறே

உன்னோடு வாழ்த லறிது.

விளக்கம்: 

ஒரு நாள் எனக்கு பசி வேண்டாம் அமைதியாக இரு என்று சொன்னால் வயிரே நீ கேட்க்க மாட்டாய், சரி உணவு அதிகமாக கிடைக்கிறது ஆகையால் இரண்டு மூன்று நாட்களுக்கு தேவையானவற்றை இன்றே நிரப்பிக் கொள் என்றால் அதையும் செய்ய மாட்டாய். நாள் தவறாமல் ஒவ்வொரு வேலையும் உன்னையை நிரப்புவதே பெரும் வேலையாக இருக்கிறது , உன் தேவைக்காகவே பலருடன் போராட வேண்டி இருக்கிறது. உன்னோடு வாழ்வது துன்பத்தை தருகிறது.



மானம்குலம் கல்வி வண்மை அறிவுடைமை

தானம்தவம் உயர்ச்சி தாளாண்மை – தேனின்

கசிவந்த சொல்லியர்மேல் காமுறுல் பத்தும்

பசி வந்திடப் பறந்துபோம்

விளக்கம்: 

ஒருவனுக்கு பசி தோன்றிய போது அவனிடத்தில் உள்ள சிறந்த குணங்கள் அனைத்தும் போய்விடும். இதை தான் “பசி வந்தால் பத்தும் பறக்கும்” என்பார்கள். அவை மானம், குலப்பெருமை, கல்வி, வலிமை, அறிவு, பிறருக்கு கொடுக்கும் குணம், தவம், பெருந்தன்மை, தளராத முயற்சி, தேன் போல் பேசும் மங்கையர் மேல் உள்ள ஆசை ஆகிய பத்தும் பறந்து போகும்.

Comments