- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
பாரதிதாசன் -படி(sem-1)
நூலைப் படி - சங்கத்தமிழ்
நூலைப்படி - முறைப்படி
நூலைப்படி
காலையில் படி - கடும்பகல் படி
மாலை இரவு பொருள்படும்படி ( நூலைப் )
கற்பவை கற்கும்படி
வள்ளுவர் சொன்னபடி
கற்கத்தான் வேண்டுமப்படி
கல்லாதவர் வாழ்வதெப்படி ? ( நூலைப் )
அறம்படி பொருளைப் படி
அப்படியே இன்பம் படி
இறந்த தமிழ்நான் மறை
பிறந்த தென்று சொல்லும்படி (நூலைப்படி)
அகப்பொருள் படி அதன்படி
புறப்பொருள் படி நல்லபடி
புகப் புகப் படிப்படியாய்ப்
புலமை வரும் என்சொற்படி (நூலைப்படி)
சாதி என்னும் தாழ்ந்தபடி
நமக் கெல்லாம் தள்ளுபடி!
சேதி அப்படி! தெரிந்து படி
தீமை வந்திடு மேமறுபடி (நூலைப்படி)
பொய்யிலே முக்காற்படி
புரட்டிலே காற்படி
வையகமே ஏமாறும்படி
வைத்துள நூல்களை ஒப்புவதெப்படி ? ( நூலைப் )
தொடங்கையில் வருந்தும்படி
இருப்பினும் ஊன்றிப்படி
அடங்கா இன்பம் மறுபடி
ஆகுமென்ற ஆன்றோர் சொற்படி ( நூலைப் )
உரை:
நூலைப்படி - சங்கத்தமிழ் நூலைப்படி - முறைப்படி நூலைப்படி
காலையிற்படி கடும்பகல்படி மாலை இரவு பொருள் படும்படி நூலைப்படி!
கற்பவை கற்கும்படி வள்ளுவர் கொள்கைப்படி கற்கத்தான் வேண்டும் அப்படி கல்லாதவர்கள் வாழ்வதெப்படி? நூலைப்படி! அறம்படி பொருளைப்படி அப்படியே இன்பம் படி இறந்த தமிழ் நான்மறை பிறந்ததென்று சொல்லும்படி நூலைப்படி! அகப்பொருள்படி அதன்படி புறப்பொருள்படி கல்லபடி புகப்புகப் படிப்படியாய் புலமை வருமென் சொற்படி சாதி என்னும் தாழ்ந்தபடி நமக்கெல்லாம் தள்ளுபடி சேதி அப்படி தெரிந்துபடி தீமை வந்திடுமே மறுபடி நூலைப்படி! பொய்யிலே முக்காற்படி புரட்டிலே காற்படி வையகம் ஏமாறும்படி வைத்துள்ள நூல்களை ஒப்புவதெப்படி? நூலைப்படி!
Comments
Post a Comment