நறுந்தொகை

 வெற்றி வேற்கை என்னும் நறுந்தொகை


பாடல் : 16

தேம்படு பனையின் திரள்பழத் தொருவிதை

வானுற வோங்கி வளம்பெற வளரினும்

ஒருவர் கிருக்க நிழலா காதே.


விளக்கம்

சுவைமிக்க பெரும் பழத்தின் விதையில் வானுயர வளர்ந்தாலும், பனைமரம் ஒருவருக்கும் நிழல் தராது.


பாடல் : 17

தௌ்ளிய ஆலின் சிறுபழத் தொருவிதை

தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன்சினையினும்

நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை

அணிதேர் புரவி ஆட்பெரும் படையொடு

மன்னர்க் கிருக்க நிழலா கும்மே.


விளக்கம்

ஆலமரத்தின் சிறிய பழத்தின் விதை, தெளிந்த நீர்கொண்ட குளத்து மீனின் முட்டையை விட சிறியதே ஆயினும், பெருமை மிக்க யானை, அலங்கரித்த தேர், காலாட்படையோடு கூடின மன்னர்க்கு நிழல் தரும்.

Comments