திருக்குறள் - அறன் வலியுறுத்தல்

 திருக்குறள்

அறன் வலியுறுத்தல்- அதிகாரம்-4


குறள் 31:

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தின்ஊங்கு

ஆக்கம் எவனோ உயிர்க்கு.

குறள் விளக்கம்:

அறத்தின்பால் ஈடுபாடு கொண்டு அதன்படி செயல்படுபவர்களுக்குதான் சிறப்புகளும், செல்வமும் வந்து சேரும்.


குறள் 32:

அறத்தின்ஊங்கு ஆக்கமும் இல்லை அதனை

மறத்தலின் ஊங்குஇல்லை கேடு.

குறள் விளக்கம்:

அறத்தைப்போல் உயர்வைத் தருவது வேறு இல்லை. அறத்தை மறுத்தால் உயர்வு இல்லை, கேடுதான் விளையும்.


குறள் 33:

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே

செல்லும்வாய் எல்லாம் செயல்.

குறள் விளக்கம்:

எங்கெங்கு எப்படியெல்லாம் அறத்தைச் செயல்படுத்த முடியுமோ, அங்கெல்லாம் இயன்றவரை அறத்தைச் செயல்படுத்துவதே சிறப்பு.


குறள் 34:

மனத்துக்கண் மாசுஇலன் ஆதல் அனைத்துஅறன்

ஆகுல நீர பிற.

குறள் விளக்கம்:

மனத்தளவில் குற்றம், குறை இல்லாமல் இருப்பதே அறம். மற்ற செயல்கள் எல்லாம் வெறும் சடங்குகளே.


குறள் 35:

 அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்

இழுக்கா இயன்றது அறம்.

குறள் விளக்கம்:

அழிக்கும் குணம், அளவற்ற ஆசை, கடும் கோபம், வன்சொல் இந்த நான்கும் இல்லாமல் இருப்பதே அறம்.


குறள் 36:

அன்றுஅறிவாம் என்னாது அறம்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை.

குறள் விளக்கம்:

நேரம் காலம் பார்த்துச் செய்வது அறமாகாது. காலம் கடந்து செய்யப்படும் அறமானது பயனில்லாமல் போய்விடும்.


குறள் 37:

 அறத்தாறு இதுஎன வேண்டா சிவிகை

பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

குறள் விளக்கம்:

பல்லக்கில் செல்பவனுக்கும், அந்தப் பல்லக்கை சுமப்பவனுக்கும் உள்ள வேறுபாட்டை அறியாமல்/உணராமல் இருப்பது அறமாகாது.


குறள் 38: 

வீழ்நாள் படாஅமை நன்றுஆற்றின் அஃதுஒருவன்

வாழ்நாள் வழியடைக்கும் கல்.

குறள் விளக்கம்:

வாழ்நாளில் மற்றவர்களுக்குச் செய்யும் நல்லவைதான், அந்த வாழ்நாளுக்கான பலன்.


குறள் 39:

அறத்தான் வருவதே இன்பம்மற்று எல்லாம்

புறத்த புகழும் இல.

குறள் விளக்கம்:

அறச் செயல்களைச் செய்வதால் கிடைப்பதுதான் இன்பம். மற்றவற்றால் கிடைப்பது இன்பமும் இல்லை, புகழும் இல்லை.


குறள் 40:

செயற்பாலது ஓரும் அறனே ஒருவற்கு

உயற்பாலது ஓரும் பழி.

குறள் விளக்கம்:

அறத்தின்பால் செயல்படும் ஒருவருக்கு, பிறவற்றால் ஏற்படும் பழிகளும் உயர்வைத் தரும்.


-திருவள்ளுவர்

Comments