- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
திருக்குறள்
மக்கட்பேறு- அதிகாரம்-7
குறள் 61:
பெறுமவற்றுள் யாம்அறிவது இல்லை அறிவுஅறிந்த
மக்கட்பேறு அல்ல பிற.
குறள் விளக்கம்:
அறிவுடைய குழந்தைகள் தவிர நான் அடைய வேண்டியது வேறு இல்லை.
குறள் 62:
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கள் பெறின்.குறள் விளக்கம்:
பழி உருவாக்காத பண்புடைய குழந்தைகளைப் பெற்றால் எழுகின்ற பிறப்புக்கு எல்லாம் தீயவை தீண்டாது.குறள் 63:
தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்.
குறள் விளக்கம்:
தான் பெற்றது என்பதே மக்கள்; அவர்கள் பெற்றது அவரவர் வினையால் வரும்.குறள் 64:
அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்.குறள் விளக்கம்:
தன் குழந்தை சின்ன கைகளால் கரைத்த கூழ், அமிழ்தைவிடவும் சிறந்த சுவையுடையதாக இருக்கும்.குறள் 65:
மக்கள்மெய் தீண்டல் உடற்குஇன்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு.குறள் விளக்கம்:
குழந்தைகள் தன்னை தீண்டுவது உடலுக்கு இன்பம். மேலும் அவர்கள் சொல் கேட்பது காதுக்கு இன்பம்.குறள் 66:
குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.குறள் விளக்கம்:
மழலைகளின் சொற்களைக் கேட்காதவர்கள்தான் இசைக்கருவிகளில் இருந்து வரும் இசை இன்பமானது என்று சொல்வார்கள்.குறள் 67:
தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி இருப்பச் செயல்.குறள் விளக்கம்:
தகப்பன் தன் குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய நன்றி, ஞானக் கூட்டங்களில் முன்னோடியாக இருக்கச் செய்வது.குறள் 68:
தம்மின்தம் மக்கள் அறிவுடைமை மாநிலத்து
மன்னுயிர்க்கு எல்லாம் இனிது.குறள் விளக்கம்:
தன்னைவிட தனது குழந்தைகள் அறிவுபெறுவது, உலகின் அனைத்து உயிருக்கும் இனிமையானதாகும்.குறள் 69:
ஈன்ற பொழுதின் பெரிதுஉவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்.குறள் விளக்கம்:
பிறக்கும்போது பெருமை கொண்ட அன்னை, தன் மகனை அறிவாளி என்று சொல்ல வேண்டும் என்று நினைப்பாள்.குறள் 70:
மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்நோற்றான் கொல்எனும் சொல்.குறள் விளக்கம்:
இவனைப் பெற பெற்றோர் என்ன தவம் செய்தார்கள் என்ற சொல்லைப் பெற்றோர் கேட்கும்படி செய்வதே பெற்றோர்க்கு மகன் செய்யும் உதவி.-திருவள்ளுவர்
Comments
Post a Comment