திருக்குறள் - வெஃகாமை

 திருக்குறள்

வெஃகாமை- அதிகாரம்–18


குறள் 171: 

நடுவின்றி நன்பொருள் வெஃகின் குடிபொன்றிக்

குற்றமும் ஆங்கே தரும்.

குறள் விளக்கம்:

நடுநிலை தவறி, நல்ல பொருள் என்று ஒரு பொருள் மீது வேட்கை கொண்டால், குடும்ப ஒழுக்கம் கெட்டு குற்ற உணர்வும் தந்துவிடும்.'


குறள் 172:

படுபயன் வெஃகிப் பழிப்படுவ செய்யார்

நடுவுஅன்மை நாணு பவர்.

குறள் விளக்கம்:

நடுவுநிலைக்கு அஞ்சும் நபர்கள், பலன் கிடைக்கும் என்றாலும் பழிக்கப்படும் நிலை வரும் என்பதால், பிறர் பொருள் மீது வேட்கை கொள்ளமாட்டார்கள்.


குறள் 173:

 சிற்றின்பம் வெஃகி அறன்அல்ல செய்யாரே

மற்றின்பம் வேண்டு பவர்.

குறள் விளக்கம்:

சிறிய இன்பத்துக்காக, வேட்கை கொண்டு நீதி அல்லாததை மாறாத இன்பம் நாடுபவர்கள் செய்யமாட்டார்கள்.


குறள் 174:

இலம் என்று வெஃகுதல் செய்யார் புலம்வென்ற

புன்மையில் காட்சி யவர்.

குறள் விளக்கம்:

மனிதர்களில் புலன்கள் வென்றவர்கள், தமக்கு இல்லையே என்ற நிலையிலும் பிறர் பொருள் மீது என்றுமே வேட்கை கொள்ளமாட்டார்கள்.


குறள் 175:

அஃகி அகன்ற அறிவென்னாம் யார்மாட்டும்

வெஃகி வெறிய செயின்.

குறள் விளக்கம்:

பிறர் பொருள் மீது ஆசைகொண்டு வெறியுடன் நடந்துகொள்பவர், அவர் எவ்வளவு கூரிய அறிவு பெற்றிருந்தாலும் அது புரிதல் அற்ற அறிவாகிவிடும்.


குறள் 176:

அருள்வெஃகி ஆற்றின்கண் நின்றான் பொருள்வெஃகிப்

பொல்லாத சூழக் கெடும்.

குறள் விளக்கம்:

அருள் நாடி வேட்கை கொண்டு ஒழுக்க வழி நிற்பவர், பிறர் பொருள் மீது வேட்கை கொண்டால் அருள் வாழ்வு அழிந்துபோகும்.


குறள் 177:

வேண்டற்க வெஃகியாம் ஆக்கம் விளைவயின்

மாண்டற்கு அரிதாம் பயன்.

குறள் விளக்கம்:

பிறர் பொருள் மீது கொள்ளும் வேட்கையால் கிடைக்கும் பலன், மரணித்தவர் அடைந்த பயனைப் போன்றது.


குறள் 178:

அஃகாமை செல்வத்திற்கு யாது எனின் வெஃகாமை

வேண்டும் பிறன்கைப் பொருள்.

குறள் விளக்கம்:

பிறர் பயன்படுத்தும் பொருள் மீது வேட்கை கொள்ளாமல் இருப்பதே அழியாத செல்வம்.


குறள் 179: 

அறன் அறிந்து வெஃகா அறிவுடையார்ச் சேரும்

திறன் அறிந்து ஆங்கே திரு.

குறள் விளக்கம்:

நீதியை அறிந்து வேட்கையை விட்ட அறிவுடையவரின் திறமையை அறிந்து உயர்வு தானாக வந்து சேரும்.


குறள் 180:

இறல்ஈனும் எண்ணாது வெஃகின் விறல்ஈனும்

வேண்டாமை என்னும் செருக்கு.

குறள் விளக்கம்:

கேடுவரும் என்பதால் பிறர் பொருள் மீது வேட்கை கொள்ள வேண்டாம்; பிறர் பொருள் மீது வேட்கை கொள்ளாமல் இருத்தலே மனமகிழ்ச்சியைத் தரும்.


-திருவள்ளுவர்

Comments