திருக்குறள்- அருள் உடைமை

திருக்குறள்

அருள் உடைமை- அதிகாரம் - 25


குறள் 241: 

அருட்செல்வம் செல்வத்துட் செல்வம் பொருட்செல்வம்

பூரியார் கண்ணும் உள.

குறள் விளக்கம்:

அருளாகிய செல்வமே செல்வத்துள் எல்லாம் சிறந்த செல்வம்: பொருள்களாகிய பிற வகைச் செயல்கள் எல்லாம் இழிந்தவரிடத்தில் உள்ளனவே.


குறள் 242: 

நல்லற்றான் நாடி அருளாள்க பல்லாற்றான்

தேரினும் அஃதே துணை.

குறள் விளக்கம்:

நல்ல வழியினாலே ஆராய்ந்து அருளைச் செய்க: பல வழியாக ஆராய்ந்தாலும், அப்படி அருள்செய்தலே உயிருக்கு உறுதுணையாகும்.


குறள் 243: 

அருள்சேர்ந்த நெஞ்சினார்க்கு இல்லை இருள்சேர்ந்த

இன்னா உலகம் புகல்.

குறள் விளக்கம்:

இருள் அடர்ந்திருக்கும் துன்ப உலகமாகிய நரகத்துக்குச் செல்லுதல், அருள பொருந்தியநெஞ்சம் உடையவர்களுக்கு ஒரு போதுமே இல்லையாகும்.


குறள் 244: 

மன்னுயிர் ஓம்பி அருளாள்வாற்கு இல்லென்ப

தன்னுயிர் அஞ்சும் வினை.

குறள் விளக்கம்:

நிலைபெற்ற உலகத்தில் உள்ள உயிர்களைக் காத்து, அருள் செய்து வாழ்கின்றவர்களுக்குத் தம் உயிரைக் குறித்து அஞ்சுகின்ற தீவினைகள் இல்லை.


குறள் 245: 

அல்லல் அருளாள்வார்க்கு இல்லை வளிவழங்கும்

மல்லன்மா ஞாலங் கரி.

குறள் விளக்கம்:

அ-ருள் கொண்-ட-வ-ரா-க வாழ்-ப-வர்-க-ளுக்-கு -எந்-தத் துன்--ப-மு-மே இல்-லை; காற்-று உயிர் வழங்-கு--தலால் வா-ழும் வள-மா-ன -ப-ரி-ய உ-ல-க-மே இ-தற்-குச் சான்-று.


குறள் 246: 

பொருள்நீங்கிப் பொச்சாந்தார் என்பர் அருள்நீங்கி

அல்லவை செய்தொழுகு வார்.

குறள் விளக்கம்:

அருள்தலிலே, இருந்து விலகித் தீயவைகளைச் செய்து வாழ்கிறவர்களே. உறுதிப்பொருளை இழந்து தம் வாழக்கைக் குறிகோளையும் மறந்தவராவர்.


குறள் 247: 

அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருள்இல்லார்க்கு

இவ்வுலகம் இல்லாகி யாங்கு.

குறள் விளக்கம்:

பொருள் இல்லாதவர்களுக்கு இவ்வுலகிலே இன்பமான வாழக்கை இல்லாதது போலவே, அருள் இல்லாதவர்களுக்கு மேலுலகத்து வாழ்வும் இல்லையாகும்.


குறள் 248: 

பொருளற்றார் பூப்பர் ஒரு கால் அருளற்றார்

அற்றார்மற் றாதல் அரிது.

குறள் விளக்கம்:

பொருள் இழந்தவர்ளும் ஒரு காலத்தில் பொருள் வளம் அடைவார்கள்: அருள் இல்லாதவரோ அதை இழந்தால் வாழ்வை இழந்தவரே: மீண்டும் அடைதல் அரிது.


குறள் 249: 

தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால் தேரின்

அருளாதான் செய்யும் அறம்.

குறள் விளக்கம்:

அருள் இல்லாதவன் செய்யும் தருமத்தை ஆராய்ந்தால், தெளிவில்லாதவன் மெய்நூலிற் கூறப்பெற்ற உண்மைப் பொருளைக் கண்டாற் போன்றதே.


குறள் 250: 

வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின்

மெலியோர்மேல் செல்லும் இடத்து.

குறள் விளக்கம்:

தன்னைவிட மெலிவானர் மேல் பகைத்துச் செல்லும் போது, தன்னை விட வலியவர் முன்பாகத் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைவிற் கொள்ளவேண்டும்.


-திருவள்ளுவர்

Comments