- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
திருக்குறள்
பெரியாரைத் துணைக்கோடல்-அதிகாரம் 45
குறள் 441:
அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன்அறிந்து தேர்ந்து கொளல்.
குறள் விளக்கம்:
அறத்தின் தன்மைகளை அறிந்து முதிர்ந்த அநிவுடையவரது நட்பினை, கொள்ளும் திறன் அறிந்து ஆராய்ந்து பெற்றுக் கொளல் வேண்டும்.
குறள் 442:
உற்றநோய் நீக்கி உறாஅமை ணிற்காக்கும்
பெற்றியார்ப் பேணிக் கொளல்.
குறள் விளக்கம்:
நாட்டிற்கு வந்தடைந்த துன்பத்தை நீக்கி, மேலும் நாட்டிலே துன்பம் வராதபடி காக்கும் தகுதியுடைய பெரியோரையே துணையாகக் கொள்ள வேண்டும்.
குறள் 443:
அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்
பேணித் தமராக் கொளல்.
குறள் விளக்கம்:
பெரியோரை விரும்பித் தமக்குரிய சுற்றத்தினராகப் பெற்றுக்கொள்ளுதல், பெறுதற்கரிய பேறுகளுள் எல்லாம் அரிதான பெறும்பேறு ஆகும்.
குறள் 444:
தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
வன்மையுள் எல்லாம் தலை.
குறள் விளக்கம்:
தன்னினும் பெரியாராக உள்ளவர்கள் தன் சுற்றத்தினராக ஆகுமாறு நடந்துவருதல், ஒருவனது வலிமையுள் எல்லாம் தலையான வலிமை ஆகும்.
குறள் 445:
சூழ்வார்கண் ணாக ஒழுகலான் மன்னவன்
சூழ்வாரைச் சூழ்ந்து கொளல்.
குறள் விளக்கம்:
தகுதியான வழிகளை ஆராய்ந்து சொல்பவரையே கண்ணாகக் கொண்டு உலகம் நடத்தலால், மன்னவன், அவரை ஆராய்ந்து தன் சுற்றமாக்கிக் கொள்ள வேண்டும்.
குறள் 446:
தக்கார் இனத்தனாய் தான்ஒழுக வல்லானைச்
செற்றார் செயக்கிடந்த தில்.
குறள் விளக்கம்:
தகுதியுடைய பெரியோர்களின் துணையுள்ளவனாகத் தான் நடந்து கொள்ள வல்லவனைப் பகைவர் பகைத்துச் செய்யக்கூடிய துன்பம் ஏதுமில்லை.
குறள் 447:
இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
கெடுக்கும் தகைமை யவர்.
குறள் விளக்கம்:
இடித்துக் கூறித் திருத்தும் துணைவரான பெரியோரைத் துணையாகக் கொண்டவரை, எவர்தாம் கெடுக்கக்கூடிய வல்லமை உடையவர்?
குறள் 448:
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்.
குறள் விளக்கம்:
இடித்துச் சொல்லி திருத்துபவர் இல்லாத பாதுகாப்பற்ற மன்னன், தன்னைக் கெடுப்பவர் எவரும் இல்லாதபோதும், தானாகவே கெடுவான்.
குறள் 449:
முதல்இலார்க்கு ஊதியம் இல்லை மதலையாம்
சார்புஇலார்க்கு இல்லை நிலை.
குறள் விளக்கம்:
முதல் இல்லாத வாணிகருக்கு அதனால் வரும் ஊதியமும் இல்லையாகும்; அவ்வாறே தன்னைத் தாங்கும் துணையில்லாதவர்க்கு உலகில் நிலைபேறும் இல்லை.
குறள் 450:
பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்.
குறள் விளக்கம்:
பலரோடும் பகைத்துக் கொள்வதைவிட, நல்லோருடன் கொண்ட தொடர்பைக் கைவிட்டு விடுதல், அதனினும் பதின்மடங்கு தீமை தருவதாகும்.
Comments
Post a Comment