- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
அறத்துப்பால்
திருக்குறள்:
திருக்குறள் 133 அதிகாரங்கள் கொண்டது. மொத்தம் 1330 குறள்கள் கொண்டது. ஒவ்வொரு குறளும் ஈரடிகளில் அமைந்துள்ளது. குறள் வெண்பாகளால் ஆனது.
மூன்று பால்களை கொண்டது- அறத்துப்பால், பொருட்பால், மற்றும் காமத்துப்பால் என்பனவாகும். அதில் முதலாவது அறத்துப்பால். இதில் 38 அதிகாரங்களும், அதிகாரத்துக்கு பத்து பாடல்கள் வீதம் 380 குறள்களும் உள்ளன. அறத்துப்பாலில் நான்கு இயல்கள் உள்ளன. அவை
அறத்துப்பால்: 4 இயல்கள்:
- பாயிரவியல்
- இல்லறவியல்
- துறவறவியல்
- ஊழியல்
பாயிரவியல்:
அறத்துப்பாலின் முதல் இயல் பாயிரவியல். இது முதல் நான்கு அதிகாரங்களை கொண்டது.
- அதிகாரம்-1- கடவுள் வாழ்த்து
- அதிகாரம்- 2- வான் சிறப்பு
- அதிகாரம்- 3- நீத்தார் பெருமை
- அதிகாரம்-4- அறன் வலியுறுத்தல்
இல்லறவியல்:
அறத்துப்பாலின் இரண்டாம் இயல் இல்லறவியல். இது அடுத்த இருபது அதிகாரங்களை கொண்டது.
- அதிகாரம்- 5- இல்வாழ்க்கை
- அதிகாரம்- 6- வாழ்க்கைத் துணை நலம்
- அதிகாரம்- 7- மக்கட்பேறு
- அதிகாரம்- 8- அன்புடைமை
- அதிகாரம்- 9- விருந்தோம்பல்
- அதிகாரம்- 10- இனியவை கூறல்
- அதிகாரம்- 11- செய்நன்றி அறிதல்
- அதிகாரம்- 12- நடுவு நிலைமை
- அதிகாரம்- 13- அடக்கம் உடைமை
- அதிகாரம்- 14- ஒழுக்கம் உடைமை
- அதிகாரம்- 15- பிறன்இல் விழையாமை
- அதிகாரம்- 16- பொறையுடைமை
- அதிகாரம்- 17- அழுக்காறாமை
- அதிகாரம்- 18 - வெஃகாமை
- அதிகாரம் - 19- புறங்கூறாமை
- அதிகாரம் - 20- பயனில சொல்லாமை
- அதிகாரம் - 21- தீவினையச்சம்
- அதிகாரம் - 22- ஒப்புரவு அறிதல்
- அதிகாரம் - 23- ஈகை
- அதிகாரம் - 24- புகழ்
துறவறவியல்:
அறத்துப்பாலின் மூன்றாம் இயல் இல்லறவியல். இது அடுத்த பதிமூன்று அதிகாரங்களை கொண்டது.
- அதிகாரம் - 25- அருள் உடைமை
- அதிகாரம் - 26- புலால் மறுத்தல்
- அதிகாரம் - 27- தவம்
- அதிகாரம் - 28- கூடா ஒழுக்கம்
- அதிகாரம் - 29- கள்ளாமை
- அதிகாரம் - 30- வாய்மை
- அதிகாரம் - 31- வெகுளாமை
- அதிகாரம் - 32- இன்னா செய்யாமை
- அதிகாரம் - 33- கொல்லாமை
- அதிகாரம் - 34- நிலையாமை
- அதிகாரம் - 35- துறவு
- அதிகாரம் - 36- மெய் உணர்தல்
- அதிகாரம் - 37- அவா அறுத்தல்
ஊழியல்:
அறத்துப்பாலின் நான்காம் இயல் ஊழியல். இது அடுத்த ஒரு அதிகார கொண்டது.
Comments
Post a Comment