இரட்சண்ய யாத்திரிகம்

 இரட்சண்ய யாத்திரிகம்- எச்.ஏ.கிருட்டிணப்பிள்ளை


நிந்தனைகளையும் கொடுஞ்செயல்களையும் பொறுத்தார்:


பொல்லாத யூதர்களும் போர்ச்சேவ கர்குழுவும்

வல்லானை யெள்ளிப்பு றக்கணித்து வாய்மதமாய்ச்

சொல்லாத நிந்தைமொழி சொல்லித்து ணிந்தியற்றும் 

பொல்லாங்கை யெல்லாநம் மீசன்பொ றுத்திருத்தார்.


சிலுவையின் சுமை:


நோக்கிலணு வொவ்வொன்று நூறாயி ரங்கோடி

மாக்கயத்தின் சும்மைம லிந்தபா வந்திரட்டி

ஆக்குசி லுவைய மலன்சி ரத்தேந்திக்

காக்கைக டனாகக் கல்வாரி நோக்கினார்.



Comments