- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
திருவள்ளுவர்
திருவள்ளுவர் பழந்தமிழ் இலக்கியமான திருக்குறளை இயற்றிய தமிழ்ப்புலவர் ஆவார். சங்க காலப் புலவரான ஔவையார், அதியமான் மற்றும் பரணர் மூவரும் சமகாலத்தவராக இருக்கலாம் என்ற கருத்தும் உள்ளது. திருவள்ளுவரது இயற்பெயர், வாழ்ந்த இடம் உறுதியாகத் தெரியவில்லை எனினும் அவர் தற்போதைய சென்னை நகரில் உள்ள, மயிலை என்றும் திருமயிலை என்றும் அழைக்கப்படும் மயிலாப்பூரில் வாழ்ந்து வந்தார் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. கிறித்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் பிறந்ததாகக் கூறப்படுகிறது. ஆங்கில ஆண்டுடன் முப்பத்தொன்றைக் கூட்டினால் திருவள்ளுவர் ஆண்டு கிடைக்கும்.
- காலம்: கி.மு. 31
- ஊர்: மயிலாப்பூர்/ மயிலை/ திருமயிலை
- தாய், தந்தை: ஆதி, பகவன்
- மனைவி: வாசுகி
திருவள்ளுவர்- வேறு பெயர்கள்:
- நாயனார்
- தேவர்
- முதற்பாவலர்
- தெய்வப்புலவர்
- நான்முகன்
- மாதானுபாங்கி
- செந்நாப்போதார்
- பெருநாவலர்
- பொய்யில் புலவன்
சிறப்புரைகள்:
“வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு”
“யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவனைப் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை.”
“வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே”
Comments
Post a Comment