தமிழ் விடு தூது- மதுரை சொக்கநாதர் [68-70]

தமிழ் விடு தூது

[68-70]


68. 
வளர்ந்தனைபான் முந்திரிகை வாழைக் கனியாய்க் 
கிளர்ந்தகரும் பாய்நாளி கேரத் - திளங்கனியாய்த்

69. 
தித்திக்குந் தெள்ளமுதாய்த் தெள்ளமுதின் மேலான 
முத்திக் கனியேயென் முத்தமிழே -புத்திக்குள்

70. 
உண்ணப் படுந்தேனே யுன்னோ டுவந்துரைக்கும் 
விண்ணப்ப முண்டு விளம்பக்கேள் - மண்ணிற்

பொருள்:

பாலும் முந்திரிகைக் கனியும் வாழைப் பழமுமாகி வளர்ந்த கரும்பாகித் தென்னையின் இளங் கனியாகி இனிக்கும் தெளிவான அமுதமாகி அவ்வமு தினும் மேலான முத்தியைத் தரும் ஒரு சுனிபோன்ற தமிழே ! இயல் இசை நாடகம் என்ற மூவகையான தமிழ் மொழியே! அறிவால் உண்ணப்படும் தேன் போன்றாய்! உன்னோடு மகிழ்ந்து கூறும் வேண்டுகோள் ஒன்று உளது. அதனை நான் சொல்ல நீ கேட்பாய்.


- மதுரை சொக்கநாதர்

Comments