- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
தமிழ் விடு தூது
[27-34]
..................புனைதரு நற்
28.
செய்யுட்சொன் ஒன்குமுயர் செந்தமிழ்ச்சொல் லோர்தான்கும்
மெய்யுட் பொருளேழ் விதத்திணையும் - மையிலெழுத்
29.
தாதியாப் பெட்டு மலங்கார மேழைந்தும்
பேதியாப் பேரெழின்மாய் பிள்ளையாய்- சாதியிலே
30.
ஆங்கமைசெப் பற்பன் ணகவற்பண் டுள்ள ற்பண்
தூங்கற்பண் பட்டத்துத் தோகையரா- ஓங்குமனத்
31.
தெண்கருவி யைந்தீன் விடுநற்று மூன்குன
பண்களும்பின் கல்யாணப் பாவையரா-யெண்கொளும்
32.
நற்றா ரகமா நவரசமாம் பிள்ளைகளைப்
பெற்றாய் பெருவாழ்வு பெற்றாயே - உற்றகலாப்
33.
பண்கள் முதற் பெண்களொடும் பாலரொடு நாடகமாம்
பெண்கொலுவில் விற்றிருக்கப் பெற்றாயே- மண்புகழத்
34.
தாழ்விலா வட்டா தசவன் எனைகளெனும்
வாழ்வெலாங் கண்டு மகிழ்ந்தாயே-ஆழ
பொருள்:
அணிசெய்கின்ற செய்யுட்குரிய சொற்கள் நான்கும், உயர்ந்த செந்தமிழ்ச் சொற்கள் நான்கும், மெய் யாகிய உட்பொருளில் எழுவகைத் திணைகளும், குற்ற மில்லாத எழுத்து முதலாகிய யாப்பின் உறுப்புக்கள் எட்டும், அலங்காரம் முப்பத்தைந்தும் இயைந்து வேறு பட்டுப் போழகு வாய்ந்த மாப்பிள்ளையாகிக் குலமாகிய அப்பா வின்கண் அமைந்த செப்பலோசையும், அகவ லோசையும், துள்ளலோசையும்,தூங்கலோசையும் ஆகிய பண்கள் பட்டத்துத் தேவியராகவும், உயர்ந்த மனத்தா லாய்ந்த ஐந்து கருவிகளைப் பெற்ற நூற்று மூன்றாகிய பண் களும் பின்னர் வரைந்த மணப்பாவையராகவும் கொண்டு மதிக்கப்படும் நல்ல ஆதரவால் ஒன்பது சுவையாகிய மக்களைப் பெற்றெடுத்தாய், பெருமையாகிய வாழ்வினைப் பெற்றாய் ; பொருந்தி நின்னைவிட்டு நீங்காத பண்கள் முத லாகிய பெண்டிர்களொடும் பிள்ளைகளொடும் நாடகமாகிய பெண்கள் கொலுவில் வீற்றிருக்கப்பெற்றாய். உலகத்தோர் புகழும்படி தாழ்வில்லாத பதினெட்டு வகைச் சிறப்புக் களாகிய வாழ்வெல்லாம் நோக்கி மகிழ்ந்தாய்.
Comments
Post a Comment