- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
தமிழ் விடு தூது
[34- 41]
34.
.....................ஆழ
35.
35.
நெடுங்கோல வையையிலென் னேசர்மேற் பட்ட
கொடுங்கோல்செங் கோலாகக் கொண்டாய்- அடங்காத
36.
கொடுங்கோல்செங் கோலாகக் கொண்டாய்- அடங்காத
36.
எங்கோவே பத்தென் றியம்புதிசைக் குள்ளே ன்
செங்கோல் செலாத திசையுண்டோ - இங்கேயுன்
37.
செங்கோல் செலாத திசையுண்டோ - இங்கேயுன்
37.
தேசமைம்பத் தாறிற் றிசைச்சொற் பதினேழும்
மாசற நீ வைத்தகுறு மன்னியரோ - வீசு
38.
மாசற நீ வைத்தகுறு மன்னியரோ - வீசு
38.
குடகடலுங் கீழ்கடலுங் கோக்குமரி யாறும்
வடவரையு மெல்லை வகுத்தாய் - இடையிருந்த
39.
வடவரையு மெல்லை வகுத்தாய் - இடையிருந்த
39.
முன்னுறுந்தென் பாண்டி முதற்புனனா டீறான
பன்னிரண்டு நாடுமப் பானாடோ - அந்நாட்டுள்
40.
பன்னிரண்டு நாடுமப் பானாடோ - அந்நாட்டுள்
40.
வையை கருவைமரு தாறுமரு வூர் நடுவே
ஐயநீ வாழு மரண்மனையோ - செய்யபுகழ்
41. ஐயநீ வாழு மரண்மனையோ - செய்யபுகழ்
மூவேந்தர் வாகனமா மூவுலகும் போய்வளைந்த
பாவேந்தே நீபெரிய பார்வேந்தோ - காவேந்து
பொருள்:
ஆழமான நீண்ட அழகுடைய வையை யாற்றி லென்னுடைய அன்பர் சிவபெருமான் மேற்பட்ட கொடிய பிரம்படியைச் செங்கோல் போல ஏற்றுக் கொண்டாய்! அடங்காத வலிமையுள்ள எமது மன்னனே, பத்தென்று கூறுந் திசைக்குள்ளே நின்னாட்சி செல்லாத இடமொன்றுண்டோ! இங்கே யுன் தேசம் ஐம்பத்தாறில் வழங்கும் திசைச் சொற்கள் பதினேழும் குற்றமற நீ அரசு புரியவைத்த குறுநில மன்னர்களோ ! அலைவீசுகின்ற மேல் கடலும் கீழ்கடலும் முதன்மையான தென்குமரியாறும் வடவேங்கட மலையும் எல்லையாக வகுத்தாய். இவற்றின் நடுவேயிருந்த தென்பாண்டி முதல் புனனாடு முடிவான பன்னிரண்டு நாடுகளும் அத்தமிழ் நாட்டின் பகுதிப்பட்ட நாடுகளோ ! அந்நாடுகளுள் வையை, கருவை, மருதாறு, மருவூர் இவற்றின் நடுவே அரசே நீ வாழும் அரண்மனை யுளதோ! மூவேந்தரை ஊர்தியாகக் கொண்டு மூன்றுல கமும் போய்ச் சுற்றிவந்த பாவேந்தனே! நீ பெரிய பார் வேந்தனோ !
Comments
Post a Comment