- Get link
- X
- Other Apps
தமிழ் விடு தூது[49-56]
முரசங் கறங்க முடிவேந்தர் சூழ
வரசங்க மீதிருந்து வாழ்ந்தே - அருள்வடிவாய்
50.
வரசங்க மீதிருந்து வாழ்ந்தே - அருள்வடிவாய்
50.
ஓங்குபுகழ் மூவ ரொருபா வொருபஃதும்
ஆங்கவைசொல் வாதவூ ராளிசொல்லும் - ஓங்குமவன்
51.
ஆங்கவைசொல் வாதவூ ராளிசொல்லும் - ஓங்குமவன்
51.
கூற்றா யரனெழுதுங் கோவையுங் கோதிறாய்
மாற்றா விரட்டைமணி மாலையும் - தேற்றமுறப்
52.
மாற்றா விரட்டைமணி மாலையும் - தேற்றமுறப்
52.
பற்றா மிலக்கணநூற் பாவுநூற் பாவறிந்து
கற்றார் வழங்குஞ்ச காப்பியமுங் - கொற்றவருக்
53.
கற்றார் வழங்குஞ்ச காப்பியமுங் - கொற்றவருக்
53.
கெண்ணிய வன்னனைக ளீரொன் பதுமறியக்
கண்ணிய மிக்கபெருங் காப்பியமும் - நண்ணியே
54.
கண்ணிய மிக்கபெருங் காப்பியமும் - நண்ணியே
54.
இன்புறு சேரனரங் கேற்றமகிழ்ந் தம்பலத்தான்
அன்புறுபொன் வண்ணத்தந் தாதியும் முன்பவர்சொல்
55.
அன்புறுபொன் வண்ணத்தந் தாதியும் முன்பவர்சொல்
55.
மாத்தமிழா மும்மணி மாலையும் பட்டினத்தார்
கோத்தணிந்த மும்மணிக்கோவையும்-மூத்தோர்கள்
56.
கோத்தணிந்த மும்மணிக்கோவையும்-மூத்தோர்கள்
56.
பாடி யருள்பத்துப் பாட்டுமெட் டுத்தொகையும்
கேடில் பதினெட்டுக் கீழ்க்கணக்கும்— ஆடகமா
பொருள்:
சிவபெருமான் திருவருளின் உருவமாகி யுயர்ந்த புகழ்பெற்ற மூவரும் பாடிய ஒருபா ஒருபஃதும், அப்பதிகங்களை யுரைத்த வாதவூராளி பாடலும், உயர்ந்த அம்மணிவாசகர் கூற்றாகச் சிவபெருமான் எழுதிய திருக் கோவையார் என்னும் நூலும், குற்றமில்லாத அம்மையார் பாடிய சொல்லாகிய இரட்டைமணி மாலையும், தெளிவு பொருந்த எல்லார்க்கும் பற்றாகிய இலக்கண நூற் சூத்திரங் களும், அவற்றையறந்து கற்ற புலவர்கள் பாடி வழங்கிய ஐம்பெருங்காப்பியங்களும், அரசர்க்குரியனவாக எண்ணப் பட்ட நாடு நசர் முதலிய பதினெட்டுவகைச் சிறப்புக்களும் தெரியுப்படி பாடப்பட்ட பெருமை மிகுந்த பெருங்காப் பியங்களும், தில்லையையடைந்து இன்புற்ற சேரமான் அரங் கேற்ற அம்பலத்தான் மகிழ்ந்து கேட்டு அன்புற்ற பொன் வண்ணத்தந்தாதியும், முன்னரே அன்னவர் பாடிய பெருந் தமிழ் நூலாகிய மும்மணிமாலையும், பட்டினத்தார் பாமாலை யாகக் கோத்துச் சிவபெருமானுக்கணிந்த மும்மணிக் கோவையும், சான்றோர்கள் தந்த பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும் கெடுதல் இல்லாத கீழ்க்கணக்கும்.
Comments
Post a Comment