- Get link
- X
- Other Apps
தமிழ் விடு தூது[56- 61]
பாடி யருள்பத்துப் பாட்டுமெட் டுத்தொகையும்
கேடில் பதினெட்டுக் கீழ்க்கணக்கும் - ஆடகமா
57.
கேடில் பதினெட்டுக் கீழ்க்கணக்கும் - ஆடகமா
57.
வெற்பனையார் மாதை விமலரிடத் தேயிருவர்
கற்பனையாற் சொன்ன கலம்பகமும்—முற்படையேச
58.
கற்பனையாற் சொன்ன கலம்பகமும்—முற்படையேச
58.
டாடற் கலிங்கமழித் தாயிர மானைகொன்ற
பாடற் கரிய பரணியுங்-கூடல்
59.
பாடற் கரிய பரணியுங்-கூடல்
59.
தராதிபன் கூத்தனெதிர் நண்ணியோர் கண்ணிக்
கொராயிரம்பொ னி்ந்த வுலாவும்-பராவுமவன்
60.
கொராயிரம்பொ னி்ந்த வுலாவும்-பராவுமவன்
60.
பிள்ளைத் தமிழுமுன்னாம் பேராத பல்குரவர்
வெள்ளத் தினுமிகுத்தோர் மெய்காப்ப வுள்ளத்து
61.
வெள்ளத் தினுமிகுத்தோர் மெய்காப்ப வுள்ளத்து
61.
விரியஞ் செய்து வினையொழிய வேராச
காரியஞ் செய்யுங் கவிதையே-பாரில்
பொருள்:
பெரிய பொன் மலை போன்ற திரு மேனியுடையவராகிய ஆமாத்தூரில் வீற்றிருக்கும் இறைவ ரிடத்தில் இரட்டையர் என்ற புலவர்கள் கற்பனையாகப் பாடிய கலம்பகம் என்ற நூலும், தூசிப்படை (முன்னணிப் படை) யுடன் சென்று வலிமையாற் கலிங்கநாட்டினையழிக் துப் போரில் ஆயிரம் யானைகளைக் கொன்ற வென்றியைக் குறித்துப் பாடிய புலவராற் பாடற் கருமையான பரணி யென்னும் நூலும், கூடல் மன்னன்: கூடற் பெரும் பெருமாள் என்று பெயர்பெற்ற இராச ராச சோழன் ஒட்டக்கூத்தன் எதிரே யமர்ந்து ஒரு கண்ணிக்கு ஓர் ஆயிரம் பொன் பரிசில் தந்து பெற்ற உலா என்னும் நூலும், யாவரும் துதிக்கும் அவ்வொட்டக்கூத்தன் பாடிய பிள்ளைத் தமிழும், முதலாகிய ஏந்நாளும் பெயராத பல புலவர் பெருமக்கள் வெள்ளமென்ற எண்ணினும் மிகுதி யாகியவர் (ஆகிய மெய்காப்பாளர்) மெய்காத்து நிற்க மனத்துள் வீரம் செறிந்து தீவினைகள் நீங்குமாறு முதன்மையான செயல் செய்து வருகின்ற கவிதை என்ற அரசனே.
Comments
Post a Comment