- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
தமிழ் விடு தூது
[101-106]
101.
...................................... ஆண்பனை நற்
102.
பெண்பனையா யாக்கிளையாற் பெண்களிலே காரைக்கால்
வண்பதியா ரெளவையென வந்துதித்தாய்- நண்பார்
103.
நிலதவதி யாகுடனே சென்மித்தாய் மாடக்
குலதவதி யானத்தர் கூடல் - பலதவஞ்சேர்
104.
மேனியார் கண்டிகையும் வெண்ணீறுங் கண்டுருகும்
மானியார் தேசிகனா வந்துதித்தாய் - ஞானியார்
105.
துங்க மகவாகத் தோன்றி வனப்பகைக்குஞ்
சிங்கடிக்குந் தாதையாய்ச் சீர்செய்தாய் - இங்கு நீ
106.
பெண்களெல்லாம் வாழப் பிறந்தமையா சென்மனத்திற்
புண்களெல்லா மாறப் புரிகண்டாய்
பொருள்:
ஆண்பனையை நல்ல பெண்பனை யாக்கினை நீ ; பெண்களில் காரைக்கால் என்ற வளமான பதியில் வாழ்ந்த அம்மையாராகவும், ஒளவையாராகவும் வந்து நீ தோன்றினை ;நண்புடைய திலகவதியாருடன் பிறந்தனை ; மாளிகை வரிசையுடைய தவமும் தியானமும் உடையவர் வாழும் மதுரைப் பதியில் மிகுந்த தவஞ் சேர்ந்த அக்கவட மும் வெண்ணீறும் அணிந்த மேனியுடைய அடியார்களைக் கண்டுருகு மானியார்க்கு ஆசாரியனாக வந்து தோன்றினை ; இசை ஞானியாருடைய உயர்ந்த மகவாகத் தோன்றி வனப் பகைக்கும் சிங்கடிக்குந் தந்தையாகிப் புகழை வளர்த்தனை ; இவ்வுலகிற் பெண்களெல்லாம் நல்வாழ்வு வாழ்வது கருதி நீ தோன்றினமையால் பெண்ணாகிய என் மனத் தெழுந்த கவலையெல்லாம் நீங்கச் செய்வாய்.
Comments
Post a Comment