- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
தமிழ் விடு தூது
[106-112]
106.
........................................... ஒண்கமலத்
107.
தன்னத் தனைவிடுப்பே வன்னந்தா ளங்கவரை
இன்ளந்தான் கண்டறியா தென்பரே- மன்னெந்தாய்
108.
அப்பாடுலசர் வண்டை யனுப்பினவர்காமம்
செப்பாதே யென்றடூற் றிகைக்குமே தப்பாது
109.
மானைப்பொய்த் தூதுசொல்லியாவேன்பேன் வல்வியப்பூத்
தானைப் பரமர்பாத் சாராதே-ஏனைப்பூங்
110.
கோகிலத்தை நான்விடுப்பேன் கோகலமுங் காக்கையினம்
ஆகி வலியானுக் கஞ்சுமே - ஆகையினால்
111.
இந்தமனத்தைத்தூதா யேகென்பே னிம்மனமும்
அந்தமனோ தீதர்பா லண்டாதே - எந்தவிதம்
112.
என்றென் றிரங்கினே னென்கவலை யெல்லாம்பொற்
குன்றனையா யுன்னுடனே கூறுகேன்
பொருள்:
ஒளி பொருந்திய தாமரை இருக்கும் அன்னத்தைத் தூதாக விடுக்கக் கருதினேன், அன்னப் பறவை அங்குள்ள சொக்கநாதரை இன்னமுங் கண்டறிந்ததில்லை யெனச் சொல்வாரே; பொருந்திய என் தந்தையே ! அவ்விடத்திற்கு ஒரு வண்டைத் தூதாக விடுப்பம் என எண்ணின் அவர் காமஞ் செப்பாதே யென்றால் அது திகைக்கும் அன்றோ; தவறாமல் மானைத் தூது போய்ச் சொல்லி வா என்று விடுக்கக் கருதின் அம் மானும் அழகிய புலித் தோலாடை யுடுத்தர் எனக் கண் டஞ்சி அவர்பாற் சாராமல் வந்து விடுமே, மற்றும் அழகிய குயிலை நான் விடுக்கக் கருதினால் அக்குயிலும் காக்கையின மாதலால் வலியான் என்ற பறவைக் கஞ்சி அவர்பாலணுகாதே; இந்த என் மனத்தையே தூதாக விடுக்கலாம் என்றாலோ என் மனமும் அந்த மனத்திற் கெட்டாதவரைக் கண்டு எங்கனஞ் சொல்லும்? அதுவும் அணுகாதே; பின் எந்தவிதம் யாரைத் தூது விடுப்பது என்றாய்ந்தேன், வருந்தினேன்; ஆதலால் என் கவலை யெல்லாம் பொன்மலை போன்றாயே! உன் பாலே கூறுகின்றேன், நீ கேள் .
Comments
Post a Comment