- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
தமிழ் விடு தூது
[112-119]
112.
.................................. சென்றாலும்
113.
பண்ணிய பத்தொன் பதினா யிரத்திருநூற்
றெண்ணிய தொண் ணூற்றென் றெனுந்தொடையாய் - நண்ணி
114.
ஒருதொடை வரங்கி யுதவரயோ வோர்சே
விருதுடை யார்க்குதி வேறோ - தருமிக்கே
115.
ஓர்வாழ்க்கை வேண்டி யுயாகிழிகொள் வான்கொங்கு
தேர்வாழ்க்கை யென்றெடுத்த செய்தியும் - கீரன்
116.
இசையா வகையி னியம்பினா னென்றே
வசையாடித் தர்க்கித்த வரக்கும் - இசையான
117.
பாட்டுக் கிரங்கியொரு பாணனுக்குச் சேரலன்மேற்
சீட்டுக் கவிவிடுத்த சீராட்டும்- பாட்டியலில்
118.
நாத்திரமா மேவுபொருணன்ற வறுபதெனும்
குத்திரமாப் பாடியரு டோற்றமும் மாத்திரமோ
119.
உன்னோ வர்விளையாட்டொன்றே வடமதுரைக்
கந்நேர முன்பிறகேயார்வந்தார்- மன்னவன்மேற்
பொருள்:
நீதூது சென்றாலும் முன்னோரியற்றிய பத்தொன்பதினாயிரத் திருநூற்றுத் தொண்ணூற்றொன்று என்ற கணக்குடைய தொடைக்கு உரிமையுடையாய்,போய் ஒரு தொடை வாங்கி எனக் குதவாயோ? உதவுவை . ஒரு விடைக் கொடியுடையவர்க்கு நீ வேறா? ஒற்றுமையுடையை. முன் சொக்கநாதர் தருமி என்னும் மறையவனுக்கு இல்லற வாழ்க்கை பெறுவதற்காக உயர்ந்த பொற்கிழி யுதவும் பொருட்டுக் ''கொங்குதேர் வாழ்க்கை" யென்றெடுத்துக் கூறிய பாடலும், நக்கீரன் பொருத்த மின்றிச் சொற்போர் புரிந்தானென்று அவனை இகழ்ந்து சொற்போர் புரிந்த வாக்குவன்மையும், பண்ணோடு கூடிய பாடலுக்கு மனமிரங்கி ஒரு பாணபத்திரனுக்குச் சேர மன்னனிடம் போய்க் கொடுக்குமாறு சீட்டுக்கவி வரைந்து கொடுத்த சிறப்புச் செயலும், பாட்டின் இலக்கணத்தில் நாவின்கண் உறுதியாகக் கூறப்படும் பொருளிலக்கணத்தை நன்றாக அறுபது நூற்பாக்களால் ஆக்கித்தந்த காட்சியும் ஆகிய இவை மட்டுமோ? உன்னோடு கூடி யவர் விளையாடியது ஒன்றுதானோ? பலவுள்ளன.
Comments
Post a Comment