- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
தமிழ் விடு தூது
[119-123]
119.
...................................................... வடமதுரைக்
கந்நேர முன்பிறகேயார்வந்தார்- மன்னவன்மேற்
120.
காசியா ராசியக் கண்டகளி யைப்பகிர
வாசியிலாம் கானகத்தில்வந்தவரார்- நாரினொடும்
121.
போற்றியுறும் பத்திரதிகான போந்து கிழவுருவில்
தோற்றி விறகு சுமந்தவரார்-தெற்றியவர்
122.
யேரிய பொற்பலகை யிட்டவரார் மற்றவன் றன்
தேயமனை விக்கெதிரா நேர்ந்தவளைப்- போயவையில்
123
தள்ளியிசை தம்பிக்கத் தக்கவரார் தென்மதுரைக்
குள்ளிருந்த சொக்கருனக் குள்ளன்றெ- எள்வி
பொருள்:
வடமதுரைக்கு உன்பிறகே அந்நாளில் வந்தார்? சொக்கரல்லரோ வந்தவர்? காரியார் நாரியார் என்ற புலவர் இருவர் பாடிய கவியைப் பாதியாகப் பகிர்ந்துகொள்ள வழியில்லாக் காட்டில் இடையனாக வந்தவர் யார்? அன்போடும் போற்றி வழிபடும் பாண பத்திரன் பொருட்டு ஒரு கிழவர் வடிவமாகத் தோன்றி விறகு சுமந்துவந்தவர் யார் ? தெளிவாக அப் பாண பத்திரற்கு ஒருவராலுங் கொடுத்தற்கு அருமையான சங்கப்பலகையைத் தந்தவர் யார்? இன்னும் அப் பத்திர னுக்கு அன்புடைய மனைவியாகிய விறலிக்குப் பகையாக வந்த விறலியை அவையிற் சென்று நீக்கி இசையில் வென்று வெற்றியைப் பத்திரன் மனைவிக்கே நிலைக்கும்படி செய்தவர் யார்? இவ்வாறு அரிய செயல்களை பெல்லாம் புரிந்தவர் சொக்கரல்லரோ? ஆய்ந்தால் மதுரைக் கோயிலினுள்ளே யிருக்கும் சொக்கர் உனக்குள்ளே யிருக்கின்றார் என்பது உண்மையாகும்.
Comments
Post a Comment