- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
தமிழ் விடு தூது
[123-131]
123.
தள்ளியிசை தம்பிக்கத் தக்கவரார் தென்மதுரைக்
குள்ளிருந்த சொக்கருனக் குள்ளன்றெ- எள்ளி
124.
வடமொழியில் வேத வசளமேயீசர்
திடமொழியா மெனபார் ஒலரே- அடரும்
125.
பரசமய கோலரியாய்ப் பாண்டிநா டெங்கும்
அரசமய திதிதுத்து மத்றாள் விரகதி
126.
ஆதிக்கண் வையையில்வே தாகமத்தைத் தாபித்தாய்
சோதிக்கி வேடகமே சொல்லாதோ- வேதத்தே
127.
வாதவனங் கண்டா தடைத்தகத வந்திறந்தாய்
வேதவனங் கண்டால் விளம்பாதோ- வேகம்
128.
அமிழ்தினுமிக் கென்னுமுனிக் கன்பருளைச் சொன்னார்
தமிழ்முனியென் னும்போதா ராதோ- தமிழால்
129.
அறம்பொரு ளின்பம்வீ டாரணர்சொன் னாரத்
திறம்பரமர் வாக்கேசெப் பாதோ-மறந்திடலில்
130.
கற்பலகை யோதுமறை காணார்கீழ் நிற்கவு நீ
பொற்பலகை மேலிருந்தாய் போதாயோ- தற்பரரோ
131.
டெண்ணிறந்த வாசியழைத் திட்டாய் சதுர்வேதப்
பண்ணிறைந்த வாசி பகராதோ - அண்ணலார்
பொருள்:
தமிழ் மொழியை இகழ்ந்து வடமொழியி லுள்ள மறைமொழிகளே ஈசர்க்கு உறுதியான மொழியாம் என்று சிலர் கூறுவர் ; அஃது அறியாமையே ! வேற்று மதங்களை யழிக்கின்ற சிங்கமாக நீ பிறந்து பாண்டி நாடு முழுவதும் சைவசமயத்தை நிலைநி றுத்திய வந்நாளில் விரை வாக வந்து முதலில் வையை நதியில் மறையாகிய சைவாக மத்தை நிலைநிறுத்தினை. ஆய்ந்து நோக்கின் ஏடகம் என்ற இடமே அதனைச் சொல்லுமன்றோ? மறையாகிய தெய்வத்தால் சூரியன் ஒளியும் அங்கு நுழையாது அடைத்த கதவினைத் திறந்தாய்; அச்செயலை மறைக்காட்டுத் திருக்கோயில் கண்டால் அதுவே சொல்லும், வேதமானது அமிழ்தினும் இனிமை மிக்கது என்று வடமொழியைக் கற்ற அகத்திய முனிவர்க்கு என் அன்பராகிய சொக்க நாதர் உன்னை (தமிழ் மொழியை)க் கற்பித்தார் இச் செய்தியைத் தமிழ் முனிவன் என்று அகத்தியனுக்கு வந்த பெயரே அறிவிக்கும். தமிழ் மொழியால் அறம்,பொருள், இன்பம், வீடு என்ற நாற்பொருளை முப்பாலாக வகுத்துப் பிரமன் (திருவள்ளுவராகப் பிறந்து) பாடினன். அச் செயலினைப் பரமராகிய சிவபெருமான்' பாடிய பாடலே சொல்லுமன்றோ? மறக்க முடியாத கல்வியின் அள வெல்லாங் கூறும் மறைகளாற் காணப்படாதவர் ஆய சிவ பெருமான் கீழே நிற்கவும் நீ அழகிய சங்கப் பலகையின் மேல் ஏறியிருந்தாய். இதுவொன்றே போதாதோ? சொக்க நாதருடனே அளவிறந்த நரிப்பரியையும் முன் அழைத்தாய் நீ, நான்கு மறைகளையும் கல்லணையுடைய குதிரையாக்கி யதும் சொல்லும்.
Comments
Post a Comment