தமிழ் விடு தூது - மதுரை சொக்கநாதர் [131-139]

 

தமிழ் விடு தூது
[131-139]



131. 

.....................................அண்ணலார்


132. 

தென்பா லுகந்தாடுஞ் செய்தியெல்லா முன்னிடத்தில் 

அன்பாலென் றப்பாலு மாரறியார்-உன்பேர்


133. 

பழியார் திசைச்சொல்லார் பன்னார் திருவாய் 

மொழியார் குழறி மொழிவார்- அழியா


134. 

உருவால வாயிருக்கு மோதரிய முத்தித் 

திருவால வாயிருக்குஞ் செல்வர் -ஒருமால்


135.

வடமதுரை யே னுமுன்னே வந்தவடி வென்னத் 

தடமதுரை மீனுயர்த்த தாணு— படர்தீர்க்குஞ்


136. 

சத்திபுரத் தோர்பாற் றழைத்துமகிழ்த் தோர்சீவன் 

முத்திபுரத் தோர்பான் முளைத்தெழுந்தோர்- அத்திசைபோல்


137. 

ஆங்கோரிருநான் கயிரா வதஞ்சுமக்கும் 

பூங்கோயிற் குள்ளுறைந்த புண்ணியனார்- பாங்காம்


138. 

இடம்பவன மீதாக விந்திரனவந் தேத்துங் 

கடம்பவன மீதிலுறை காத்தர்—அடும்பேர்


139. 

அலகம் பரிக்கு மரியார் முடிவேய்ந் 

துலகம் பரிக்குமுறை யுள்ளார் -பலநாளும்


பொருள்:

தலைவராகிய சிவபெருமான் தென் றிசையை விரும்பி வந்து நடிக்கும் செயலனைத்தும் உன்னி டத்தில் வைத்த அன்பினாலென்பதை அப்பாலுள்ள நாட் டிலும் அறியாதவர் யார்? உன் பெயரைப் (தமிழ் என்பதை) பழிநிறைந்த வேறுதிசைச் சொல்லுடையவர் திருத்தமாகச் சொல்லார். திருவாய் மொழியுடையார் குழறிக் குழறி உன் பெயரைச் சொல்வார். கெடாத வடிவத்தால் விரும்பி வேதங்களும் ஓதுதற்கரிய முத்திதரும் திருவாலவாயிற் கோயில் கொண்டுறையும் செல்வரும், ஒப்பற்ற திருமால் வடமதுரைக்கு வருமுன்னே வந்த வடிவம் இதுதான் என்று சொல்லுமாறு பெரிய மதுரையில் வந்து மீனக்கொடியை யுயர்த்தி அரசுபுரிந்த சுந்தர பாண்டியரும், துன்பத்தை நீக்கும் உமையம்மையின் ஒருபாகத்தில் அமர்ந்து மகிழ்ந்து ஒப்பற்ற சீவன்முத்திபுரம் என்ற மதுரைப் பதியில் மூலலிங்கமாக முளைத்துத் தோன்றியவரும், அத்திசை போல் எட்டு அயிராவதங்கள் என்ற யானைகள் சுமக்கும் அழகிய கோயிலுக்குள் வீற்றிருக்கும் புண்ணியனாரும், அதன் பக்கமாக இடமும் கோயிலும் இதுவேயாக இந்திரன் வந்து வழிபடும் கடம்பவனத்தில் தங்கும் ஒளியுடைய வரும், கொல்லும் வாய்நுனியுடைய பெரிய அம்பாகிய திருமாலாலும் அறிதற்கரியவரும், மணிமுடியைப் புனைந்து இவ்வுலகத்தை யாண்ட முறையுள்ளவரும் ஆகிய சிவ பெருமான்.


- மதுரை சொக்கநாதர்


Comments