- Get link
- X
- Other Apps
தமிழ் விடு தூது
[166-169]
166.
.......................................மங்கத்தான்
167.
மாய்ந்தாலு மாமுதலை வாய்ப்பிள்ளை யைப்படைத்தாய்
மாய்ந்தாலும் பின்படைக்க வல்லையே - ஏய்ந்தவுரை
168.
செய்தாளென் றென்சொல் செஷியோர்ந்து செல்வாயிங்
கெய்தாமலங்கிருக்க வெண்ணாதே - பொய்தீரத்
169.
தேசிவருஞ் சொக்கருக்கே சென்றிருந் தாங்கவரைப்
பேசிவருத் தூது பிறிதுண்டோ - நேசமொடு
பொருள்:
தோன்றாமல் மறைய இறந்து போயினும் பெரியமுதலை வாயினின்று பின் அக்குழந்தையை வருமாறு படைத்தாய் நீ, ஆதலால் நான் இறந்தாலும் பின்னர்ப் படைக்கவும் வல்லாய், பொருந்திய சொற்களையே புகன்றாள் இவள் என்று மதித்து என் சொற்களைச் செவி யேற்றுச் செல்வாய். மீண்டுவரா மல் அங்கிருக்க நினையாதே. பொய் நீங்க (உண்மையாக) ஒளி நிறைந்த சொக்கர் பால் சென்று தங்கியிருந்து ஆங்கு அவரை மனம் இயையு மாறு செய்து இனிமையாகப் பேசி வருந் தூது வேறு உளதோ? இல்லை
Comments
Post a Comment