- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
தமிழ் விடு தூது
[169-177]
169.
..............................................நேசமொடு
170.
தைவரினுங்காட்டத் தகாதாரைத் தாதையர்க்குக்
கைவிரலாற் காட்டியருள் காளையும்-தெய்வவெள்ளிப்
171.
பூதர வாள்வரைப் போற்றமுயன் றையாற்றில்
ஆதரவாய்க் கண்ட வரசரும் . நாதர்
172.
அளந்தருள் செம் பொன்னைமணி யாற்றிலிட் டாரூர்க்
குளந்தனிலே தேடியருள் கொவும் - வளந்திகழும்
173.
காளத்தியில்வந்த காட்சிகயி லாயத்து
நீளத்தான் சொற்றவனு நியன்றோ - கெளப்பால்
174.
அம்மைதமக் கில்லாதா ரம்மைதா மாவிருந்தார்
அம்மையென்று முன்னுரைத்த வம்மையாய்த் தம்மெதிரே
175.
வெள்ளானை மேற்கொண்ட வேந்தர் வரவிடுத்த
வெள்ளானை மேற்கொண்ட வித்தகராய்த்-தள்ளாது
176.
விஞ்சுவரால் வண்ணானை வெண்ணிற்ற ரென்றுபணிந்
தஞ்சலிசெய் தாட்செய்த வன்பராய்ச்-சஞ்சரியாத்
177.
தென்கையி லாயவரைச் செல்வர்பாற் சென்றாயே
உன்கையி லாகாத தொன் றுண்டோ -என்கையால்
பொருள்:
அன்புடனே மனத்தாற் றடவினும் ஒருவரானும் காட்டத்தகாதவராகிய சிவபெருமானைக் கைவிரலாற் சுட்டித் தந்தையார்க்குக் காட்டிய பிள்ளை யாரும், தெய்வத் தன்மையுடைய வெள்ளிமலையில் வீற் றிருக்கும் பரமனைக் கண்டு போற்ற முயன்று அப்பரமனைத் திருவையாற்றில் ஆதரவாகக் கண்டு போற்றிய அரசரும், சிவபெருமான் அளந்து தந்த செம்பொன்னை மணிமுத் தாற்றிற் போட்டுத் திருவாரூர்க்குளத்திலே தேடியெடுத்த தலைவராகிய சுந்தரரும், வளம் விளங்கிய திருக்காளத்தியில் வந்த காட்சி கயிலாயத்துக் காட்சியை நிகர்த்தது என நீட்டமாகக் கண்டு பாடியவராகிய நக்கீரரும் ஆகிய இவர்கள் எல்லாரும் நீயே யன்றோ? அப்பாலும் கேள், தமக்குத் தாயில்லா தவராகிய கடவுளும் தாயாகவே ஒரு பெண்ணின்பால். வந்திருந்தவரும் ஆகிய ஈசனார் 'அம்மையே' என்று தம் வாக்கால் அழைத்த காரைக் காலம்மையாரும் ஆகித், தமக்கு எதிராக வெள்ளிய விடையை யூர்தியாக மேற்கொண்ட தலைவராகிய சிவ பெருமான் வரவிடுத்த வெள்ளை யானையின் மேலேறிச் சென்ற அறிஞரும் ஆகி, வண்ணானையும் தள்ளா மல் மிஞ்சிய உவர்மண்ணால் வெண்ணீறு பூசிய அடியவரென்று வணங்கிக் கைகுவித்துத் தொண்டு செய்த அடியவராகிய சேரமான் பெருமாளும் ஆகி, யெங்குஞ் சஞ்சரித்துத் தென்கைலாய மலைச்செல்வரிடத்துஞ் சென்றாயே, உன் செயலால் முடியாதது ஒன்றுண்டோ? இல்லை; ஆதலால் நீ செல்வாய்.
Comments
Post a Comment