- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
தமிழ் விடு தூது
[177-183]
177.
..................................................என்கையால்
178.
ஆயு மவள்பாகத் தன்பரு முக்கிரராம்
சேயுமீபுரந்திருக்குந் தென்மதுரை- வாயினிய
179.
செவ்வழியே செல்வாய்தி செல்வழியி னல்வழிதான்
எவ்வழி யென் டூ லியம்பக்கேள் -எவ்வழியும்
180.
வெல்வா யுனை நினைந்து வேயுறு தோளியென்று
செல்வார்தங் காரியஞ்சித் திக்குமே - செல்வாய்
181.
தடையுண்டோ வையாறு தன்னிலே பொன்னி
இடைவிலங்கச் சென்றதறி யேனோ - இடையிலே
182.
பாலை நில நெய்தலாப் பண்ணினா யின்னுமதைச்
சோலை நில மாக்குவை நான் சொல்லுவதென் --மேலானார்
183.
கூறும் பொதிசோறு கொண்டு வரினுனக்கு
வேறும் பொதிசோறு வேண்டுமோ - வீறாகக்
பொருள்:
என்று பலரும் கூறுவதால் அன்னை யாகிய உமையும் அவள் பாகத்தமர்ந்த அன்பராகிய சிவ பெருமானும் உக்கிர குமார பாண்டியன் என்ற முருகக் கடவுளும் வந்து அரசுபுரிந்த தென்மதுரைக்கு இனிமை யான திருத்தமான வழியே செல்லுக. நீ செல்லும் வழி நல்வழியாக இருக்க வேண்டும், அஃது எவ்வழி யென்று நீ வினவில் சொல்வேன் கேள். எவ்வழியாகச் சென்றாலும் வெற்றி பெற்று மீள்வாய், உன்னை நினைந்து "வேயுறு தோளி" என்ற பாடல் பாடிச் செல்பவர் காரியங்களெல்லாம் முற்றுப்பெறுமே! செல்வாய், இடை யூறு நேருமோ? திருவையாற்றில் காவிரி வெள்ளந் தடுத்தும் அதனை விலக்கி நீ சென்ற செயல் நான் அறியாததோ? அன்றியும் ஓரிடத்திலே பாலைவனத்தை நெய்தனிலமாகச் செய்தனை. இன்னும் அப்பாலைவனத்தைப் பூஞ்சோலையாகச் செய்யவும் கூடும். உனக்கு நான் என்ன வழி சொல்வேன் ? எல்லார்க்கு மேலானவராகிய சிவ பெருமான் யாவரும் வியந்து சொல்லும்படி கட்டுச்சோறு கொண்டு வந்தனரென்றால் உனக்கு வேறும் ஒரு கட்டுச் சோறு ஒருவர் கட்டிக்கொடுக்க வேண்டுமோ? வேண்டாம், செல்வாய்.
Comments
Post a Comment