- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
தமிழ் விடு தூது
[198-207]
198.
............................................................................... வம்பாகப்
199.
பின்போ யமனோடப் பேர்த்தோடும் வையையிலே
முன்போ யெதிர்போய் முழுகியே - அன்போடே
200.
தாழ்ந்து நீள் சத்தந் தனைக்கற்றா ருள்ளம்போல்
ஆழ்ந்த வகழி யகன்றுபோய்ச் - சூழ்ந்துலகில்
201.
மேன்மே லுயர்த்தோங்கு வேதம்போன் மேலாக
வான்மே லுயர்ந்த மதில்கடந்து - போனால்
202.
மிருதிபுரா ணங்கலைபோல் வேறுவே றாக
வகுதிரு வீதிசூழ் வந்தே - இருவினையை
203.
மோதுஞ் சிவாகமம்போன் முத்திக்கு வித்தாக
ஓதுந் திருக்கோயி லுட்புகுந்து - நீதென்பால்
204.
முன்னே வனைங்கி முறையினயி டேகமுனி
தன்ளேயம் போலாத் தளவிசையும் - தன்னடைந்து
205.
தேறும் படிவர் சிவலோகஞ் சேர்த்திருக்க
ஏறும் படி நிறுத்து மேணிபோல் - வீறுயர்ந்த
206.
கோமேவு கோபுரமுங் கூடலின்மேன் முன்னொருநான்
மாமேகஞ் சேர்ந்ததுபோன் மண்டபமும்- பூமேவும்
207.
மட்டளையும் வண்டௌப்போய் மாளிகைப் பத்தியறைக்
கட்டளையுங் கண்டு களிகூர்ந்தே-இட்டமணிச்
பொருள்:
இயமன் பின்னிடைந்து ஓடுமாறு பெயர்ந்து நீரோடுகின்ற வையையாற்றிற் புதுமையாக முன்போய், எதிர்சென்று நின்று நீராடி,அன்புடனே வணங்கி நீண்ட இலக்கண நூல்களைக் கற்றவர் மனம்போல ஆழமுடைய வகழியைக் கடந்துபோய் உலகத்தில் வளைந்து மேலுமேலும் உயர்ந்து நிற்கும் வேதங்களைப்போல வானத்து மேலுயர்ந்து தோன்று மதிலையுங் கடந்து நீ போனால் மிருதியும், புராணமும், கலைகளும் போல் வேறு வேறாகச் சிறிதும் பெரிதுமாகத் தோன்றும் திருவீதிகளை வலமாகச் சுற்றி வந்து நல்வினை தீவினையாகிய இருவகைப் பட்ட வினைகளையும் தொலைக்கும் சிவாகமங்களைப்போல முத்திக்கு விதையாக அறிஞர் கூறும் திருக்கோயிலின் உள்ளே புகுந்து நீ முதலில் தென்பால் நின்று வணங்கி முறையாக அபிடேக முனிவர் தம் அன்புபோல வாய்ந்த தளத்தின் பொருத்தமும் இறைவனையடைந்து தெளியும் தவவேடமுடையார் சிவலோகத்தைச் சேர்ந்து தங்கு வதற்கு ஏறும்படிகளை யமைத்துள்ள ஏணியைப்போல் பெருமைபெற்ற தலைமை வாய்ந்த கோபுரங்களும் கூடலின் முன்னை நாளில் மேலிடத்தில் ஒரு நான்கு பெருமேகங் களும் கூடியதுபோன்ற மண்டபமும், மலரிற் பொருந்திய தேனை யுண்ணச்செல்லும் வண்டுபோலச் சென்று மாளிகை களில் வகுத்திருக்கும் பத்திபத்தியான அறைகளின் கட்டளையையும் கண்டு மகிழ்ச்சி மிகுந்து.
Comments
Post a Comment