தமிழ் விடு தூது - மதுரை சொக்கநாதர் [245-248]

 

தமிழ் விடு தூது
[245-248]



245. 
போற்றுவாய் நீயும் புரோகிதரை முன்னனுப்பித் 
தோற்றரவு செய்து துதித்ததற்பின் - ஆற்றல்

246. 
அரிய சிவாகமத்தோ ராதிசைவர் தம்பால் 
உரிய படையா வொதுங்கி - அருமையுடன்

247. 
மூவர் கவியே முதலாங் கவியைந்தும் 
மூவராய் நின்றார்தம் முன்னோதி - ஓவாதே

248. 
சீபாத மெண்ணாத தீயவினைப் பாவிசெய்த 
மாபாத கந்தீர்த்த மாமருந்தைத் - தீபமணிப்


பொருள்:

புரோகிதர்களை முதலில் விடுத்து வருகையை அறிவித்துத் துதித்தபின் அருமையான வலிமை யுடைய சிவாகமத்தோராகிய ஆதிசைவர் தம்பால் அடைந்து பூசைக்குரிய பொருள்களைப் படைத்துத் திரு முன்னில்லாமல் ஒருபுறமாக ஒதுங்கி நின்று அருமையுடன் மூவர் கவியே முதலாகிய ஐந்து கவிகளையும் மூவராகவே நின்ற இறைவர் தம் முன்பு பாடித் துதித்து ஒழியாமல் திருவடிகளை நினையாத தீவினை புரிந்த பாவியொருவன் செய்த மாபாதகத்தையும் தீர்த்த பெருமையுற்ற மருங் தாகிய சிவபெருமானை.


- மதுரை சொக்கநாதர்

Comments