- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
தமிழ் விடு தூது
[88 -96]
88.
மன்னர் கவர்ந்தும் வளர்பொருளே கைப்பொருள்கள்
என்ன பொருளுனைப்போ லெய்தாவே - நன்னெறியின்
89.
மண்ணிற் புகழுருவாய் வாழ்வதற்கும் வாழு நர்
விண்ணிற்போய்த் தேவுருவாய் மேவுதற்கும் எண்ணியுனைச்
90.
கொண்டுபுகழ் கொண்டவர்க்கே கூடுமுனைக் கூடாத
தொண்டருக்குத் தென்பாலே தோன் றுமால் - நண்டமிழே
91.
ஈங்குனது சங்கத்தா லீச குயர்ந்தாரோ
ஓங்குமவ ரானி யுயர்ந்தாயோ-பூங்கமல
92.
விடாளும் வாணியங்கை மேலே யிருந்தாயோ
ஏடாக வுன்மே லிருந்தாளோ - ஆடரவத்
93.
தாழ்பாய லாளரைதி தானே தொடர்ந்தாயோ
சூழ்பாயோ டுன்னைத் தொடர்ந்தாரொ- வாழ்வே யென்
94.
றோதிமுனி கேட்க வுனைமுருகர் சொன்னாரோ
சோதி யவரை தி சொற்றளையொ -பேதியா
95.
நேசருன க் கேபொருளாய் தின்றாரோ தீண்மதுரை
வாசருக்கு நீபொருளாய் வந்தாயோ- பாசமுறும்
96.
என்செய்தி நிகண் டிரங்குவது நீதியல்லால்
உன்செய்தி நாடுனா வுரை செய்வேன் - இன்சொல்லாய்
பொருள்:
மண்ணுலகத்தில் நல்லொழுக்கமுடன் புகழ் வடிவமாய் வாழ்வதற்கும், அவ்வா று வாழ்பவர் பின் விண் ணுலகம் சென்று தெய்வ வடிவமாகப் பொருந்தி யின்பந் துய்த்து வாழ்வதற்கும் ஆராய்ந்து உன்னைத் துணையாகக் கொண்டு புகழ் அடைந்தவர்க்கே கூடும். உன்னைக் கூடாது வாழும் அடியார்க்குத் தென்பால் உள்ள எமனுலகமே கிடைக்கும். குளிர்ந்த தமிழ் மொழியே! இவ்வுலகின் உன் (தமிழ்ச்) சங்கத்தால் சிவபெருமான் உயர்வு பெற்றாரோ? உயர்ந்த அப்பெருமானால் நீ யுயர்ந்தனையோ ? தாமரைப் பூவை வீடாகக் கொண்டுறையும் கலைமகள் அகங்கையின் மேலே நீ யிருந்தனையோ ? உன்னை எட்டுவடிவமாக்கி யதன்மேற் கலைமகள் இருந்தனளோ? ஆடும் பாம்பாகிய தாழ்ந்த பாயலுடைய திருமாலை நீதானே பின்றொடர்ந்து சென்றனையோ? அத் திருமால்தாம் சுருட்டிய பாயுடன் உன்னைப் பின்றொடர்ந்தனரோ? அகத்திய முனிவர் முருகக் கடவுளை நோக்கி " என் வாழ்வே தமிழ் மொழியினைக் கற்பிக்க வேண்டும்' என்று கேட்க வுனை முருகக்கடவுள் அம்முனிவர்க்குக் கற்பித்தனரோ? ஒளியே! அம்முனிவரைக் கற்குமாறு நீதான் உரைத்தனையோ? வேறுபடாத என் அன்பர் சிவபெருமான் உனக்குப் பொருளாக முன் நின்றாரோ? நீண்ட மதுரையில் வீற்றிருக்கும் அப்பெரு மானுக்குப் பொருளாக நீதான் வந்தனையோ ? இவை என் மனத்தெழுந்த ஐயங்கள்; இவற்றை நீக்குமாறு அறியேன். மயக்கமுற்ற என் செயலினை யாய்ந்து கண்டு மனமிரங்கி உதவிபுரிவதே நீதியாகும். உன் செய்திகள் எல்லாவற்றையும் நானே சொல்லத்தகுதியுடையேன் இனிய சொற்களையுடைய தமிழே.
Comments
Post a Comment