- Get link
- X
- Other Apps
நந்திக்கலம்பகம்
கலம்பகம் :
தமிழில் உள்ள சிற்றிலக்கியங்களில் கலம்பகமும் ஒன்று. இதில் "நந்திக் கலம்பகம்" என்ற நூல் தமிழில் உருவான கலம்பக வகைகளில் சிறந்ததாகும். கலம்பகம் என்ற சொல் இரண்டு சொற்களின் கூட்டு ஆகும். கலம்பு + அகம் = கலம்பகம் என்றும், கலம் + பகம் = கலம்பகம் என்றும் இந்தச் சொல்லைப் பிரிக்கலாம்.
- கலம்பு + அகம் = கலம்பகம் - பல்வேறு வகையான உறுப்புகள் இந்த இலக்கிய வகையில் அகத்தே - உள்ளே - கலந்து வருவதால் கலம்பகம் என்று அழைக்கப்படுகின்றது.
- கலம் + பகம் = கலம்பகம் - கலம் என்றால் 12 என்று பொருள். பகம் என்றால் பகுதி அல்லது பாதி என்று பொருள். இங்கும் பன்னிரண்டின் பகுதி ஆறு ஆகும். எனவே, 12 + 6 = 18. இந்த இலக்கிய வகையில் 18 உறுப்புகள் கலந்து வருவதால் கலம்பகம் என்று பெயர் பெறுகின்றது எனலாம். பலவகைப் பாடல்கள் ஒருங்கிணைந்து உருவாவதால் இந்தச் சிற்றிலக்கிய வகைக்கு இப் பெயர் ஏற்பட்டது.
நந்திக் கலம்பகம்:
தெள்ளாற்றுப் போரில் வெற்றி பெற்ற நந்திவர்ம பல்லவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பெற்றதே ' நந்திக் கலம்பகம்'. இதுவே முதலில் தோன்றிய கலம்பக நூலாகும்.
இது காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த பல்லவ மன்னன் தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்மன் குறித்துப் பாடப்பட்டது. இதுவே கலம்பக நூல்களில் காலத்தால் முற்பட்டு விளங்குவதாகும். மூன்றாம் நந்திவர்மனின் காலம் கி.பி.825-850 என்பதால் நந்திக் கலம்பகத்தின் காலம் கி.பி.9 ஆம் நூற்றாண்டு ஆகும்.
`நந்திக் கலம்பகம்’ , மற்ற கலம்பக நூற்களைப் போலல்லாமல் வரலாற்று நூலாகவே திகழ்கின்றது. உள்ளதை உள்ளவாறு கூறுவது வரலாறு. உள்ளதை உயர்த்திக் கூறுவது இலக்கியம்.
மூன்றாம் நந்திவர்மனது அரசியல் தொடர்பான செய்திகள் நந்திக் கலம்பகத்தில் அதிகமாகக் காணப்படுகிறது.இந்நூலில் நந்தி வர்மனின் தெள்ளாறு வெற்றியைப் பற்றி மட்டும் 16 பாடல்களில் சிறப்பாகக் கூறப்பட்டுள்ளது.கொற்ற வாயில் முற்றம், வெறியலூர், வெள்ளாறு, தெள்ளாறு போன்ற பல்வேறு போர்க்களங்களைப் பற்றிக் கூறும் சிறந்த வரலாற்று நூலாக இது திகழ்கிறது.
நந்திவர்மனது போர் , வெற்றி, வீரம், கொடை, கல்வி முதலியவற்றைப் புகழ்ந்து கூறுகிறது. இந்நூலின் ஆசிரியர்பற்றிய தெளிவில்லை. ஆனால் மூன்றாம் நந்திவர்மனின் உடன் பிறந்தவன் ஒருவனே பாடியிருக்க வேண்டும்! என்று சான்றோர் கருதுகின்றனர்.
சிறப்புகள்:
- கலம்பகங்கள் மதுரைகலம்பகம், , திருவாமத்தூர்க்கலம்பகம் என ஊர் பெயரால் பெயர் பெரும். இது பாட்டுடைத்தலைவனின் பெயரால் நந்திகலம்பகம் என பெயர் பெற்றது.
- கலம்பகத்தில் கடவுளை பாடினால் 100 பாடலும் அரசனை பாடினால் 90 பாடலும் இருக்கும் .இது அரசனை பாடியிருந்தும் இதில், 100 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.
- “நந்திக் கலம்பகத்தால் மாண்ட கதை நாடறியும் ” – சோமேசர் முதுமொழி வெண்பா
- “கலம்பகமே கொண்டு காயம் விட்ட தெள்ளாற்றை நந்தி ” – தொண்டை மண்டல சதகம்
Comments
Post a Comment