திருக்குறள்

திருக்குறள்

   உலக பொதுமறையாம் திருக்குறள் ஒரு தொல் தமிழ் இலக்கியம் ஆகும். இது பதினெண்கீழ்கணக்கு நூல்கள் என்னும் பதினெட்டு நூல்களுள் ஒன்று. இது திருவள்ளுவர் என்பவரால் இயற்றபெற்றது. இது கி.பி 2 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்று நம்பப்படுகிறது. திருக்குறள் உலகில் உள்ள பல மற்ற மொழிகளில் மொழிப்பெயர்க பெற்றுள்ளது. உலக மக்கள் அனைவருக்கும் பொதுவான வாழ்வியல் அறிவுரைகள் கூறும் நூல் திருக்குறள். எனவே இது உலக மக்கள் அனைவராலும் போற்ற படுகின்றது. உலக பொது மறை என்ற சிறப்பு பெயரும் பெற்றுள்ளது.

  திருக்குறள் அமைப்பு:

             திருக்குறள் 133 அதிகாரங்கள் கொண்டது. மொத்தம் 1330 குறள்கள் கொண்டது. ஒவ்வொரு குறளும் ஈரடிகளில் அமைந்துள்ளது. குறள் வெண்பாகளால் ஆனது.
மூன்று பால்களை கொண்டது:
  • அறத்துப்பால்
  • பொருட்பால்
  • காமத்துப்பால்

அறத்துப்பால்:

அறத்துப்பாலில் நான்கு இயல்கள் உள்ளன. இதில் மொத்தம் 38 அதிகாரங்கள், 380 குறள்கள் உள்ளன.
  • பாயிரவியல் - 4 அதிகாரங்கள்
  • இல்லறவியல்- 20 அதிகாரங்கள்
  • துறவறவியல்- 13 அதிகாரங்கள்
  • ஊழியல்- 1 அதிகாரம்

பொருட்பால்:

பொருட்பாலில் ஏழு இயல்கள் உள்ளன. இதில் மொத்தம் 70 அதிகாரங்கள், 700 குறள்கள் உள்ளன.
  • அரசியல் - 25அதிகாரங்கள்
  • அமைச்சியல் - 10 அதிகாரங்கள்
  • அரணியல் - 2 அதிகாரங்கள்
  • கூழியல் - 1 அதிகாரம்
  • படையியல் - அதிகாரங்கள்
  • நட்பியல் - 17 அதிகாரங்கள்
  • குடியியல் - 13 அதிகாரங்கள்

காமத்துப்பால் (அ) இன்பத்துப்பால் :

காமத்துப்பாலில் மூன்று இயல்கள் உள்ளன. இதில் மொத்தம் 25 அதிகாரங்கள், 250 குறள்கள் உள்ளன.

  • ஆண்பால் கூற்று- 7 அதிகாரங்கள்
  • பெண்பால் கூற்று- 12 அதிகாரங்கள்
  • இருபால் கூற்று- 6 அதிகாரங்கள்

வேறு பெயர்கள்:

  • உலகப்பொதுமறை
  • முப்பால்நூல்
  • உத்தரவேதம்
  • தெய்வநூல்
  • திருவள்ளுவம்
  • பொய்யாமொழி
  • வாயுறை வாழ்த்து
  • தமிழ்மறை
  • பொதுமறை
  • திருவள்ளுவப் பயன்
  • வள்ளுவப்பயன்
  • தெய்வமாமறை
  • தமிழ் மனு நூல்
  • நீதிநூல்

சிறப்புரைகள்:


'அணுவைத் துளைத்து ஏழ் கடலைப்புகட்டிக் குறுக தரித்த குறள்'
 -  ஔவையார்

'வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு'
-பாரதியார்


“யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல் வள்ளுவனைப் போல் இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை.”
- பாரதியார்

  
“வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே”
- பாரதிதாசன்


"ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி "
-பழமொழி

" பழகு தமிழ்ச் சொல்லருமை நாலிரண்டில்"
-பழமொழி



Comments